நீலநைல்கரையில் பிறந்து வந்தவளோ நீ

முல்லைச் சரம்சூடிய கருங்கூந்தலால்
முகிலுக்கும் சவால் விடுகிறாய்
முல்லைப்பூ புன்னகை செவ்விதழ்களால்
ஆகாயச் செவ்வானமாய்ச் சிரிக்கிறாய்
தொல்லைத் தொலைக்காட்சித் தொடரும்
நீபோய்ச் சிரித்தால் வாழ்வுபெறும்
எல்லையில்லா நீலக்கடலை இருவிழிகளில் அடக்கியவளே
எகிப்த்தின் நீலநைல்கரையில் பிறந்து வந்தவளோ நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jul-20, 10:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே