பல்லவி ஆயிரம் நெஞ்சில் ஊர்வலம் போகுதடி

பாட்டுக்கொரு பல்லவி சொல்
என்றான் இசையமைப்பாளன்
ஒன்று சொன்னேன் இரண்டு சொன்னேன்
மூன்று சொன்னேன் ...சொன்னேன் ...சொன்னேன்
இல்லை இல்லை என்று மறுத்துவிட்டான்
பாவைக்கொரு பல்லவி சொல் என்றான்
திருப்பாவை திருவெம்பாவை என்றேன்
போடா என்று விரட்டிவிட்டான் !

விரக்தியில் வெளியே வந்தேன்
எதிரே நீ வந்தாய்
பல்லவி ஆயிரம் நெஞ்சில் ஊர்வலம் போகுதடி
குடியரசுதின அலங்கார வண்டிகள் போல்.....
வருகை புரிந்த வெளிநாட்டு விருந்தினர் போல்
பல்லவியர் தென்றல் வணக்கத்தை ஏற்று சற்று நில் நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jul-20, 11:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே