உந்தன் விழிகளின் பார்வையில்

கண்ணே உந்தன் விழிகளின் பார்வையில்
நான் காண்பதுதான் எத்தனை மாயங்கள்
கயல்போல் துள்ளும் விழிகள் நாட்டிய
நளினங்கள் காட்ட துள்ள துள்ள தில்லானா
ஜதியும் சேர்க்க வீணையின் இனிய
நாதமும் சேர்த்து மீட்க அதை பார்க்க
பார்க்க நான் பரவசம் அடைந்தேன்
இதுவென்ன மாயம் விழிகளின் பார்வையில்
சுருதி லயம் தாளம் கூட
பரதமும் சேர்ந்து மயக்குதே எந்தன்
மனதை என்று எண்ணும்போதே அது
உந்தன் விழியோடு இணைந்ததே' கண்ணும்
கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே'
என்னே உந்தன் பார்வையின் மாயம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jul-20, 1:35 pm)
பார்வை : 180

மேலே