காகிதக்கிறுக்கல்கள்

எண்ணற்ற காகிதக் கிறுக்கல்கள்...
எண்ணங்களின் கோர்வையாய்;
காகிதம் மேல் கண்ணியமாய் பதிக்கப்பட்ட கவிதைக்கிறுக்கல்கள்!
அது ஒருவகைக் கிறுக்குத்தனம்!
ஒருவகைத் தியானம்!
மனதின் ஓரமாய் மறைந்திருக்கும் மர்மப்புதிர்கள்,
கேட்டுவிட நினைத்தும் கேட்டிராமல் குவிந்துகிடக்கும் வினாக்கள்,
சொல்லிட நினைத்தும் சொல்லிராமல் மௌனித்துப் புதைந்திருக்கும் பதில்கள்,
கனவுகள் துரத்தியே களைத்துப்போன கதைகள்,
ஏமாற்றமாகிப் போன எதிர்பார்ப்புக்கள்,
நடுவில் நிலைத்திராமல் நகர்ந்துபோன நிம்மதிமிக்க சிலநாட்கள்,
என்றோ ஓர்நாள் நனவாகிடுமென்ற நாட்டத்தில்
சின்னச்சின்ன ஆசைகள்கோர்த்தே மனதில்கட்டிய கற்பனைக்கோட்டைகள்
என்றே
பலவித நினைப்புகளின் பிரதிபலிப்பாய் அக்கவிதைக்கிறுக்கல்கள்!
எழுதிப்பத்திரப்படுத்திய கிறுக்கல்களை
விடவும் பன்மடங்கு அதிகமாய் இடையே கிழித்தெறிந்தவைகள்!
கண்களுக்கு சுமையாகிப்போன கனவுகளை
என்றும்
சுமக்கின்றன காகிதங்கள்
கவிதைக் கிறுக்கல்களாய்...
Sara Imtiyas✍️
Faculty of Allied Health Sciences
University of Peradeniya

எழுதியவர் : Sara Imtiyas (13-Jul-20, 3:41 pm)
சேர்த்தது : SaraImtiyas
பார்வை : 32

மேலே