என் கோபக்காதலியே

உனக்குள் உறைகிறேன்
உன் நினைவில்
கனவில்
கவிதை வரைந்து
உனக்குள் கரைகிறேன்..
மனதுள் குழைகிறேன்
உன் விழியில்
மொழியில்
தமிழும் மறந்து
மழையாய் விழுகிறேன்..
தொடும் வானில்
நிலவாய் சிரித்தாய்
பறவையாய் திரிகிறேன்
தீண்டிட..
தென்றலேறிப்பயணம்
போனாய்
மலராய் மலர்ந்தேன்
தழுவிட..
அற்புதமாய் குவிகிறாய்
அனிச்சையாய் மலர்கிறாய்
மறதியிலும்
மறந்திடா பிழையடி நீ..
உனக்குள் உறைகிறேன்..

Rafiq

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (13-Jul-20, 8:58 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 163

மேலே