என் அன்பு காதலியே💞

என் அன்பு காதலியே 💞

இன்பத்தை அள்ளி வந்து இனியவளே
தென்றலை சுமந்து வரும் சுகந்தமே
மலரின் சிரிப்பை முகம் அதில் அரும்ப செய்த அதிசயமே
வானவில்லின் நிறங்களை விழி வழியாக மின்ன செய்யும் வண்ண கதிரே
காற்றினிலே அசைந்தாடும் நாணல் என இடை கொண்ட இன்ப சுரங்கமே
காப்பிய நாயகர்களின் காவிய நாயகியே
கவிஞர்களின் கற்பனை எட்டா கலை ஓவியமே
இளைஞர்களின் இதயங்களை கொள்ளை அடித்து உலக பேரழகியே
பிரம்மன் படைத்த படைப்புகளில் அவனே இன்று வரை வியக்கும் அற்புத படைப்பே
மலர்கள் ஒன்று கூடிய மாநாட்டில் சிறந்த இதழ்கான பரிசை வென்ற இளவரிசியே
மாமல்லபுர சிலைகள் வடித்த சிற்பி உன் வடிவம் தனை கண்டு மயங்கி அழகாய் வார்த்து எடுத்த அற்புத சிலையே
நிலவாள் நின் எதிரே வர தயங்கும் மிஞ்சும் மின்சாரமே
மேகங்கள் படை சூழ வந்து தாலாட்ட துடிக்கும்
கறுங்கூந்தல் அழகியே
காலதேவன் எனக்காக அனுப்பி வைத்த என் உயிரோவியமே
காதல் தீபம் என் மனதில் ஏற்றிவிட்ட என் இதய ராணியே
மயக்கும் கண்களால் மாதுளை இதழால்
மாயமான இடையால்
என்னை முழுவதுமாக ஆட்கொண்ட
என் அன்பு காதலியே ....
- பாலு..

எழுதியவர் : பாலு (13-Jul-20, 9:33 pm)
சேர்த்தது : balu
பார்வை : 312

மேலே