கோவிட்

கொரோனா
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
கால்கள் இன்றி முடமாக
கடவுள் என்னைப் படைத்தாலும்
நாடுகள் முழுக்க சிறு வயதில்
நன்றாய் பரவி வளர்ந்தேனே
தனிமைப் படுத்தலில் பயமில்லை
தரும் விஷம் எனக்கு புதிதில்லை
வீட்டில் தனித்தே அடைத்தாலும் --என்
விருப்பம் வருடத்தில் கிடைத்தேறும்
தேர்தல் நேரம் பயணத்தை
திறம்பட பணத்தினில் தொடங்கிட்டால்
ஓட்டுக்கான பணத்தோடு
ஒன்றாய் நானும் சென்றடைவேன்
அப்புறம்
அணை கட்டி எவர் நின்று தடுத்தாலும்
அனைவரின் உடலிலும் இடம் பிடிப்பேன்
பின்
தனி மனித விலகல் இருக்காது
தடை செய்ய அரசுக்கும் தோனாது
என் இலட்சியம் நிச்சயம் நிறைவேற
பல கட்சிகள் எனக்கு கை கொடுக்கும்
அதுவரை
அரசியலாரின் பணம் தேடி
இரகசியமாக பயனிப்பேன்

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

எழுதியவர் : க.செல்வராசு (14-Jul-20, 7:13 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 85

மேலே