புறா

🕊️🕊️🕊️புறா🕊️🕊️🕊️
🐦🐦🐦🐦🐦🐦🐦
வானத்தில் பறக்கும் வல்லமை எனக்கு --என்னை
வளர்த்துன் வாழ்வில் மகிழ்ச்சியைப் பெருக்கு
வாழ்வைத் தேடி வலசை போகா வாழ்க்கை என்பது என் இனத்தின் கணக்கு ஒன்றோடு ஒன்றென்பது
என் துணையின் இலக்கு
ஒற்றையாய் வாழேன் அது தனி வழக்கு இளவரசன் கடிதம் சுமந்த விலைக்கு இளவரசி தந்த முதல் முத்தம் எனக்கு மாநிலச் சிறப்பு பறவையில் எனக்கு மண்ணில் சாதித்து மனதினில் செருக்கு
ஓலை சுமக்கும் கால்கள் எனக்கு ஒழித்தது இன்றைய செயலிகள் கணக்கு சண்டை போடும் சகலரின் நிலைக்கு சமாதான அழகு என் முகத்தில் இருக்கு வலை கட்டி பிடிக்கும் எண்ணம் உனக்கு கலை என நீ வளர் வருவேன் உன் மனைக்கு.
க.செல்வராசு
🐦🐦🐦🐦🐦🐦🐦🐦

எழுதியவர் : க.செல்வராசு (14-Jul-20, 7:33 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : puraa
பார்வை : 77

மேலே