உன் பார்வை பிரம்மாஸ்திரம்

இந்திரஜித் எய்த ப்ரம்மாஸ்திரத்திற்கு கட்டுண்ட
அனுமனைப்போல் ஆனேனே உந்தன் விழிப்பார்வைக்கு
கட்டுண்ட நான் ..... உன் பார்வையால் கட்டிவிட்ட
நீதான் பெண்ணே என் கட்டை அவிழ்த்திடலாகும்
என்னை வந்தடைந்து கட்டியணைத்து ஓர் முத்தம் கொடுப்பின்
கட்டவிழும் உன்னைக் கட்டியணைக்க என் கைகளும் விடுபட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jul-20, 8:17 pm)
பார்வை : 128

மேலே