அழகான காதல் கவிதை

💜💙💚💜💙💚💜💙💚💜💙

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

💙💜💚💙💜💚💙💜💚💙💜

மறந்ததேன்...மறந்தேன்..
பெண்ணே! நான் மறந்தேன்....

உன் கண்களின் அழகில்
நான் இமைக்க மறந்தேன்...

உன் வாய்மொழி அழகில்
என் தாய்மொழி மறந்தேன்....

உன் இதழ்கள் அழகில்
நான் உண்ண மறந்தேன்...

உன் மேனி அழகில்
நான் மெய் மறந்தேன்....

உன் உடையழகில்
நான் உறங்க மறந்தேன்....

உன் கால் அழகில்
நான் கவிதை எழுத மறந்தேன்....

உன் புன்னகை அழகில்
நான் சிரிக்க மறந்தேன்....

உன் முக அழகில்
என் முகத்தையும் மறந்தேன்...

உன் பேரழகில்
என் பெயரையே ! மறந்தேன்....

உன் மொத்த அழகில்
இந்த உலகத்தையே மறந்தேன்...

*கவிதை ரசிகன்*


💚💙💜💚💙💜💚💙💜💚💙

எழுதியவர் : கவிதை ரசிகன் (14-Jul-20, 8:56 pm)
பார்வை : 57

மேலே