கவிஞரின் காதல் ♥️♥️

கவிஞரின் காதல்🌹

உயிர் கொடுத்த அன்னை மீது இயற்கையான காதல்
உலகறிய செய்த தந்தை மீது பயம் கலந்த காதல்
கல்வி போதித்த ஆசிரியர் மதிப்பு மிகுந்த காதல்
என் உயிரை விட மேலான தமிழ் மீது அளவற்ற காதல்
என் இதயத்தை கொள்ளை அடித்த அவள் மீது அளபறிய காதல்
என்னை நிழலாக தொடரும் என் நண்பன் மீது உலகளவு காதல்
என்னை வாழ வைக்கும் இயற்கை மீது எனக்கு எல்லையற்ற காதல்.

அருனோதயம் அற்புதம்
சூரியோதயம் ஆனந்தம்
கடற்கரை காலை காட்சி
காண கிடைக்காத அழகான சுகானபுவம்

மல்லிகை பூ இட்லி
கெட்டி சட்னி
தேவாமிர்தம்

வெள்ளை தாளில்
என் சிந்தனை கவிதை ஆறாக பெறுக்கெடுத்து ஓடி
எழுத்து. காம் யில் சேருகிறது.

அறுசுவை உணவு
சின்ன தூக்கம்
மீண்டும் சிந்தனை உற்று அருவியன கொட்ட
அது ஆர்பரித்து எழுத்து.காம் யில் அமர்கிறது.

தென்றல் தீண்டிய மல்லிகை பூ
ஆண் அலை, பெண் அலை கடற்கரையோரம்
விளையாட
வான வீதியில் வென்னிலவு பொலிவுடன் பவனி வர
விண் மீன்கள் கூட்டமாய் சங்கமித்து பளிச்சிட
வெள்ளை மேகமது கலைத்தும் கூடியும் காற்றில் அங்மிங்கும் அலைபாய
ஆண்டவன் படைதிட்ட இயற்கை சாட்சிகள்.

இரவு அன்னை உடுத்துவது கறுப்பு புடவை
காரணம் தான் என்ன
மற்ற நிறங்கள் பிரதிபலிக்கும்
கறுப்பு உள்வாங்கும்
கறுப்பு துக்கத்தின் நிறமாம்
இல்லை தோழர்களே
கறுப்பு மகோன்னத நிறம்
தாயின் கருவறையும் கறுப்பு தானே
இப்படி கவிதை எழுதும் நான் தூக்கம் கண்களை தழுவ....
- பாலு.








- பாலு.

எழுதியவர் : பாலு (14-Jul-20, 10:31 pm)
சேர்த்தது : balu
பார்வை : 111

மேலே