ஹைக்கூ

வறுமையின் மீது கோபம்
அடித்து நொறுக்கும் முயற்சியில்
கல்லுடைக்கும் சிறுவர்.
**
கொரோனாவிற்கு முன்பே
சமூக இடைவெளி கடைபிடித்தபடி
மயான கல்லறைகள்.
**
தேர்தல் முடிந்த
மறுநாள் கிடைத்துவிடுகிறது
வாக்காளர் அட்டை.
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Jul-20, 1:22 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 46

மேலே