நீலவானம் - காதல் தோழி

நீலவானமே -
நீ தகவல் பரிமாற்றத்தின்
உச்சம்தான் - அதற்காக
உன்னிடம் கூறிய -
என் காதல் இரகசியத்தை -
என் காதல் பெண்ணான
என் நிலவுப் பெண்ணிடம்
ஏன் கூறினாய்..? - நீயே பார்
என்காதல் நிலவானவள்-
என்னை காண நாணப்பட்டு
மேகத்துள் மறைந்து -
மெல்ல மெல்ல முகம்காட்டி
மெல்லிய காதல்மழை பொழிகின்றாள்...!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (15-Jul-20, 5:13 am)
பார்வை : 91

மேலே