காதல் வீரனே♥️

காதல் வீரனே♥️

நித்திரை வரவில்லை
நித்தம் உன் நினைப்பு
நிதானம் இழக்கிறேன்
நிழலாக நீ என்னை தொடர்வதால்.

என் காதல் வீரனே
என் உள்ளம் கவர்ந்த காதலனே
என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவனே
என் மனதை மயக்கி உன் வசம் ஆக்கியவனே

ஏனடா என்னை அப்படி பார்க்கிறாய்
ஏனடா உன் பார்வையால் என்னை கொல்கிறாய்
ஏனடா என்னை காதலித்தாய்
ஏனடா என்னை உன் பைத்தியம் ஆக்கிவிட்டாய்

கண் மூடினாலும் நீ தான்
கண் திறந்தாலும் நீ தான்
கண்ணாடியிலும் நீ தான்
குளிக்கும் நீர் துளியிலும் நீ தான்

தென்றலே ஆடையன என்னை ஆர தழுவி விடு
காதல் காளையே உன் அன்பு கரங்களால் என் இடை வளைத்து விடு
காதல் வள்ளலே உன் இதழ் கொண்டு என் இதழில் இலக்கியம் எழுதிவிடு
முத்தமிழ் சுவையே முத்த மழை பொழிந்து முடிவுவரை இல்லா இன்பத்தை அள்ளி கோடு
என் உயிர் காதலனே இரவின் நேரத்தை அதிகரிக்க ஆண்டவனுக்கு ஆனையிடு .

- பாலு.

எழுதியவர் : பாலு (15-Jul-20, 6:46 pm)
சேர்த்தது : balu
பார்வை : 145

மேலே