நகைச்சுவே திணுக்குகள் 20

அந்த விஞ்ஞானி ஏன் ரொம்பவும் வருத்தமா இருக்கார்?
அவர் ஒரு மனித ரோபோட் செய்தாரில்லே. அது அவருடைய பொண்ணைக் ௧டத்திக்கிட்டு போயிட்டுதாம்
****************.
உயரம் தாண்டல்லே உலக ரிகார்டு வச்சவருக்கு என்ன ஆச்சு?
அவர் ரெண்டடி உயர சுவரைத் தாண்டும்போது கீழே விழுந்து பல் உடைஞ்சு போச்சு.
***********************
நான் இந்தக் கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேன்.
ஏண்டா? பொண்ணுக்கு என்னடா குறைச்சல். பத்து லட்சம் வேறே தரேன்னு சொல்றாங்க. வர லட்சுமியை வேணாம்னு சொல்லக்கூடாதுடா.
வரலட்சுமியை வேணாம்னு சொல்லக்கூடாதா?
ஆமாண்டா.
அப்படீன்னா நான் சொல்ற பொண்ணையே எனக்கு கல்யாணம் பண்ணி வை.
என்னடா சொல்றே?
நான் லவ் பண்ற பொண்ணு பேர் வரலட்சுமி.
******************
எப்ப பார்த்தாலும் சிரமத்துலே இருக்கேன், சிரமத்துலேஇருக்கேன் சொல்லிண்டு இருப்பாரே நம்ம ராமு, இப்ப எங்கே இருக்கார்?
ஆசிரமத்துலே!

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (19-Jul-20, 6:56 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 202

மேலே