அவன்-அவள்-அது

அவன் ராஜேஷ், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்; வைத்த கண் வாங்காமல்; அவ்வப்போது அவள் தன்னை பார்க்கிறாளா ? என பார்த்துக் கொண்டான்; அவள் பார்க் கா தவாறு தன்னை மறைத்துக் கொண்டான்; மீண்டும் அவளை பார்ப்பதை தவிர்க்க முயன்றான்; முடியவில்லை; ஆனால், அதற்குள் மீனா அவனை நெருங்கிவிட்டாள்;
மீனா,"ஹாய் , ராஜேஷ், எப்படி இருக்கீங்க ? பார்த்து எவ்வளோ நாளாச்சு? நல்லா இருக்கீங்களா ? ";
ராஜேஷ்," ஆம், மீனா தானே; பார்த்தேன்; நீ தானான்னு சந்தேகம்; அதான், யோசித்து கொண்டிருந்தேன்;
மீனா, " எப்படி இருக்கீங்க? இவன் என் மகன்,"சுதிர்" ;
ராஜேஷ்," ஹாய் சுதிர்; பையன் , உன்னை போல சுறுசுறுப்பாக இருக்கானே ";
மீனா,"ஆமாம் ; அவங்க அப்பா கூட அதுதான் சொல்வாரு ;என்றாள், பெருமையுடன்;
ராஜேஷ், "தனியாகவா வந்த? எப்படி இருக்க ? நல்லா இருக்கியா?"
மீனா, "ரொம்ப நல்லா இருக்கேன் ; சுதிர் அப்பா எங்கன்னு பாரு, அவரை கூட்டிட்டு வா ?"
(சுதிர் வேகமாக ரெண்டு கடை தாண்டி அவன் அப்பாவை தேடி சென்றான்; )
ராஜேஷ், "மீனா, நான் இந்த ஊருக்கு வந்து ஆறு மாதம் ஆகுது; நீயும் இங்கு தான் இருக்கிறாயா ? ( சரளமாக பொய் சொன்னான் ) இன்னொரு நாள் உன்னை பார்க்கிறேன்";
மீனா,"ஏன், கொஞ்சம் இரு; அவரு வந்திருவாரு ; உன்னை அறிமுகப் படுத்தறேன்; அவர் ரொம்ப நல்லவர்;"
ராஜேஷ், " சொன்னா, கேளு; அவரு பிஸி யாக இருப்பார்; பரவாயில்லை; இன்னொரு நாள் பார்க்கலாம்; (அவள் கணவனை பார்ப்பதை தவிர்க்க முயன்றான்; )
மீனா, "சரி; சரி; அதோ பார் , அவரே வந்துட்டார்;
வாங்க பார்த்தி- மீட் Mr. ராஜேஷ்; எங்க காலேஜ் சீனியர்;
ராஜேஷ், இவரு என் கணவர்; மிஸ்டர். பார்த்தீபன். பிரைவேட் ஆக பிசினஸ் பண்றார்; "
( இருவரும் கை குலுக்கினார்கள்)
ராஜேஷ்," சார், கிளாட் டு மீட் யு சார் ; நான், சேல்ஸ் என்ஜினீயர் ஆக இருக்கிறேன் ; ( அவரை பார்த்ததும் பதட்டத்தை மறைத்து சிரித்தான் )

பார்த்தீபன், “ப்ளீஸ் டு மீட் யு சார், வாங்களேன் காபி சாப்பிடலாம்; உங்களை எங்கோ பார்த்த நியாபகம்;
மீனா, " அவர் எங்கோ அவசரமா போகணுமாம்" ;
பார்த்தீபன், (ராஜேஷ் யை பார்க்கும் போது எனக்குள் ஒரு குறுகுறுப்பு; எங்கோ சில நாட்களாக பார்த்த நியாபகம் ) சரி மீனு; நீ பேசிட்டு வா; நானும் சுதீரும் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடிவிட்டு வரோம்;
ராஜேஷ், ((நல்லவேளை, உடனே கிளம்பிட்டார் என்ற சிந்தனையுடன் ) சரி சார், ஓகே; நிச்சயம் இன்னொரு தடவை நேரம் கிடைக்கும்போது மீட் பண்ணலாம்"; சரி மீனா அப்புறம் பார்க்கலாம்;
மீனா, "என்ன ராஜேஷ், கிளம்பரத்திலேயே இருக்கீங்க;
சொல்லுங்க, அப்புறம் உங்க மிஸஸ் குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்காங்க, இந்த ஊருல தான் இருக்காங்களா ? ";
ராஜேஷ், " மீனா, நீ என்னை பற்றி நினைக்க கூடியவளா?";
மீனா, " என்னப்பா, உன்னை பற்றி நினைப்பேன்; தினம் நீ உன் குடும்பத்துடன் நன்றாக இருக்க பிரேயர் பண்ணுவேன்; மறக்க முடியுமா ? நாம ரெண்டு பேரும் காதலித்து மேரேஜ் பண்ணலாம்னு நினைத்தோம்; அது நடக்கல; நம்ம ரெண்டு பேர் வீட்டிலும் ஒத்துக்கலை; அதுக்காக " நாம பழகின போது நீங்க எத்தனை கவனமா, கண்டிப்போட இருந்தீங்க"; என் மீது உங்களுக்கு எத்தனை பிரியம் அதை மறக்கவோ, மறுக்கவோ முடியுமா ?";
ராஜேஷ், "பரவாயில்லையே ; நல்லா நியாபகம் வைத்திருக்கிறாய்;";
மீனா, " கிண்டல் பண்ணாதீங்க ராஜேஷ் ; வாழ்க்கை பயணத்தில் சில தூரங்களை நடந்து கடப்பது போல பல கஷ்டமான நேரங்களை மறந்து கடந்தால் தான் வாழ முடியும்";
ராஜேஷ், " நல்லா பேச கற்றுக் கொண்டாய், சந்தோசமாக இருந்தால் சரி ?"
மீனா, " எப்போதும் உண்மையாக இருக்க பழகினால், சந்தோஷம் நம்ம கூடவே வரும்;"
ராஜேஷ், " ஓகே ; மீனா; உன் நம்பர் கொடு; மீண்டும் சந்திக்கிறேன்; "
மீனா, " உன் தங்கை ராதா கிட்ட என் நம்பர் இருக்கே; அவளிடம் தான் நீங்க எப்படி இருக்கன்னு கேட்டுப்பேன்;" சரி, உனக்கு மெசேஜ் அனுப்பறேன்; உங்க மனைவி, குழந்தைகளுடன் கண்டிப்பா என் வீட்டுக்கு வாங்க";
ராஜேஷ் ," சரி , பை " வருத்தமுடன் சிரித்தான்;
----
காலையில் எழுந்ததும் அவசரமாக கிளம்பும் ராஜேஷிடம் , சுமித்ரா கேட்கிறால்,
அண்ணா, எங்கே கிளம்பிட்ட?";
ராஜேஷ் ,' ஆமாம், ஒரு அவசர வேலை; "
சுமித்ரா, " நானும் பார்க்கிறேன்; இங்க வந்து ஒரு வாரமாக ஏதோ தேடற, எங்கயோ போற , வர்ற, பதட்டமாகவும், குழப்பமாகவும் இருக்கிற; என்னண்ணா விஷயம் ?, சனிக்கிழமைன்னால கோயிலுக்கு போகிறாயா ?";
ராஜேஷ், " வந்து விவரமா சொல்றேன் ";
சுமித்ரா, "அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் ; குழப்பத்துடன்; (அண்ணன் , முகத்தில் தெளிவு இல்லை ; ஏதோ செய்கிறார்; மீனா, போன் பண்ணதை கூட அவரிடம் சொல்லவில்லையே? )
----
இன்று சனிக்கிழமை; வேலை பளுவின்றி இருந்தது அந்த தொழிற்சாலை; ஊருக்கு ஒதுக்குபுறமாக;
பார்த்திபன், அந்த வாரம் பெண்டிங் ஒர்க் யை முடித்துக் கொண்டிருந்தான்;
சார், உங்களை பார்க்க ராஜேஷ் என்பவர் வந்துள்ளார்; என்று ரிஸ்ப்ஷனிஸ்ட் போன் செய்தார்;
பார்த்திபன் (என் கண் முன் ராஜேஷ் வந்து போனார்;
“ஒரு பத்து நிமிடம் கழித்து வர சொல்லுங்க” என்றேன்;
பார்த்திபன் ,(என் மனத்திரையில் ஓட விட்டேன்; இதற்கு முன்பும் சில முறை பார்த்திருக்கிறேன்; எங்கோ ? ஆமாம்; போன வாரம் ஞாயிறு நம் வீட்டை கிராஸ் பண்ணார்; சில முறை ட்ராபிக் ல பார்த்தேன்; இப்போது இங்கு வந்திருக்கிறார்; எதற்காக ?)
ராஜேஷ், "எக்ஸ்குஸ்மி, உள்ளே வரலாமா சார் ";
பார்த்தீபன், " எஸ், வாங்க , வெல்கம் ";" நீங்க ராஜேஷ், பினிக்ஸ் மால் ல பார்த்தோமே; எம் ஐ கரெக்ட் ?";
என்னை, என் ஆபீசை கடந்த 5 நாட்களாக நீங்க தொடர்ந்து பாலோ பண்றீங்கன்னு தெரியுது ; ஆனால் , ஏன் ன்னு புரியல;

ராஜேஷ்," ஆமாம் சார்; கரெக்ட்; ";

பார்த்தீபன், " சொல்லுங்க, நான் என்ன செய்யணும் ?"
ராஜேஷ் ," நேராக, விசயத்துக்கு வரேன்; நான் யாருன்னு உங்க மனைவி கிட்ட கேட்டீங்களா ?"
பார்த்தீபன்," ஆப் கோர்ஸ் நல்ல பிரென்ட் னு சொன்னாங்க";
ராஜேஷ், " வெறும் பிரென்ட் தான் சொன்னார்களா ?
உண்மையில் நான் அவளோட …….. " வார்த்தைகள் வராமல் தடுமாறினான்;
பார்த்தீபன்," காதலன்.... அதாவது, திருமணத்திற்கு முன் கணவனுக்கான சாய்ஸ். ஆம் ஐ ரைட் ?
அதை மீனா சொல்லல; ஆனால் நானாக புரிந்து கொண்டேன்; எங்கள் முதல் சந்திப்பில் அவள் உங்களை பற்றியும் பேசினாள்; அப்போ புரிந்து கொண்டேன், நீங்க அவள் வாழ்வில் ஒரு நல்ல இடம் பிடித்துள்ளீர்கள் என்று; அப்புறம், உங்கள் கவிதை களை அவள் புக் ஷெல்ப்பில் பார்த்திருக்கிறேன்; ஏன், படித்தும் இருக்கிறேன்; உங்களின் நேர்மையான கருத்துக்களை பற்றி, நல்ல சிந்தனைகள் பற்றி; அப்போ, புரிந்தது அவளுக்கு உங்கள் மீது ஒரு விருப்பம் இருந்திருக்கும் என்று ";
( ராஜேஷ், பார்த்தீபனின் வெளிப்படையான பேச்சில் திக்கு முக்காடினான்;பதறாமல் அவன் பேசியது இவனுக்குள் என்னவோ செய்தது. )
ராஜேஷ் ," (பதட்டமுடன்) நான் சொல்ல வந்தது என இழுத்தான் ... (வந்த வேலை முடியாதோ என)
பார்த்தீபன், “இதில் என்ன தவறு? திருமணத்திற்கு முன் தனது துணை பற்றி கனவுகள் எல்லோருக்கும் இருக்கும் ; கனவுகளும், கற்பனைகளும் அவரவர்க்கான உரிமை;
ஆனால் அதில் தொலைந்திடாத தெளிவும், பக்குவமும் தான் நல்ல அமைதியான வாழ்வை தரும்.
எனக்கு மீனா பற்றி நல்லாவே தெரியும், அவள் நேர்மையானவள்; உறவுகளுக்கு உண்மையானவள்; உங்கள் காதலியாக உங்க வீட்டினருடன் நிச்சயம் பேசி இருப்பாள்; அவங்க ஒப்புக்கொள்ளாத விஷயம் என்பதால் கடந்து வந்திருப்பாள் " என கேஸூலாக முடித்தான்.
ராஜேஷ்," எப்படி சார், இத்தனை தெளிவாக சொல்றீங்க; மீனா கிட்ட நேரடியா பேசி இருக்கீங்களா ? இதை பற்றி ";
பார்த்தீபன், " என்ன பேசணும்? ஏன் பேசணும்? அது அவளது மனதை பாதிக்கும்; தேவையற்று பேச்சுக்கள் அவளது அன்றாட வாழ்வை பாதிக்கும்; அவளது தெளிவான சிந்தனை மற்றும் நேர்மையான குணம்,எப்போதும் அவளுக்குள் இருக்கும் உண்மைக்கான மதிப்பு அவளின் ஒவ்வொரு செயலிலும் தெரியும்; அதை புரிந்து கொள்ளும் பக்குவம் மட்டும் தான் அவளுக்கான என் பரிசு; உண்மைகள் என்பது சாட்சிகளால் அறியப்படும் பொருளில்லை; உணர்வுகளால் உணரப்பட வேண்டியது; தாய், தந்தை உறவுகளைப்போல; இறை நம்பிக்கை இருந்தால் போதும் அது எப்போதும் உணர்த்தும்; "
(ராஜேஷ் சிறிது நேரம் மெளனமாக தலை குனிந்து இருந்தான்)
ராஜேஷ்," சரி சார்; நான் கிளம்பறேன்; நான் வந்து போனதை மீனா கிட்ட சொல்ல வேண்டாம் ";
பார்த்தீபன், " நீங்களே வந்த விஷயம் என்ன ன்னு இன்னும் சொல்லலை” ;

ராஜேஷ், "சார், என்னை மன்னிச்சுடுங்க; நான் முதல் முறை தப்பு செய்திட வந்திருக்கேன் என்னை ஒன்னும் கேட்காதீங்க ; நான் வரேன்”;
பார்த்தீபன், " அவசரப்படாதிங்க; வந்த விஷயம் சொல்லுங்க; நான் எதையும் தவறாக நினைக்க மாட்டேன்; "

ராஜேஷ், “என் குழந்தைக்கு ரொம்ப முடியலை; டிரீட்மெண்ட்க்கு அதிக காசு வேண்டும்னு சொன்னாங்க ; என்ன பண்றது ன்னு முழிச்சபோது என் நண்பன் தான் உன் லவ்வர் மீனா நல்லா செட்டில் ஆயிட்டாள்; பிளாக் மெயில் பண்ணுடா ன்னு சொன்னான் சார்;
மீனாகிட்ட ஒரு கெட்டவனா என்னால பேச முடியல;அதான் உங்களை மிரட்டி …சாரி ; நானும் இவ்வளோ கீழ்த்தரமாக நடக்க முயற்சி செஞ்சிட்டேன்; என்னை மன்னித்து விடுங்கள் சார்; "
பார்த்தீபன்," சாரி ராஜேஷ், வாழ்க்கை சில நேரத்தில் நம்மை எப்படி எல்லாம் சோதிக்குதுன்னு பார்த்தீங்களா?, உங்க போன்ல இருந்து இப்பவே மீனாவுக்கு போன் போடுங்க; அதை ஸ்பீக்கர் ல வைங்க;"
ராஜேஷ், " வேண்டாம் சார்; நான் வரேன் ";
பார்த்தீபன், " மீனாவின் மனதும் எந்த அளவு தூய்மையானதோ, அந்த அளவு மென்மையானதும் கூட - அவளும் என்ன யோசிக்கிறாள் என்று தெரிஞ்சிக்கலாம்; இது ஒரு சின்ன உணர்தல்; போன் பண்ணுங்க பார்ப்போம் "
( ராஜேஷின் மௌனத்தை பார்த்தீபன் - ராஜேஷ் போனை வாங்கி மீனா நம்பர் க்கு போன் செய்து ஸ்பீக்கர் ல் போடுகிறான்.)
ராஜேஷ் ," ஹலோ, மீனா நான் தான் ராஜேஷ் " ;
மீனா, ஹலோ ராஜேஷ் , உங்களை தான் நினைத்துக் கொண்டிருந்தேன்; எப்போதும் கலகலன்னு இருப்பவர் ரொம்ப டல் ஆக இருக்காரே " என்று.
மீனா தொடர்ந்தாள், " சொல்லுங்க ராஜேஷ் , உங்களை பார்த்த அன்றிலிருந்து உங்க நினைப்பு தான்; உங்களிடம் ஏதோ மிஸ்ஸிங்; உங்களுக்கு ஏதோ சொல்ல முடியாத கவலை; அதை கூடவா என்னால புரிஞ்சிக்க முடியாது ? "
ராஜேஷ் , " அதெல்லாம் ஒன்னும் இல்லை; உன்னை பார்த்த சந்தோஷம் பேச முடியல அவ்வளவு தான்; "
மீனா, " ராஜேஷ், நீங்க பொய் சொல்றீங்க ; ரெண்டு நாள் முன்னமே உங்க தங்கை சுமி கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்; உங்க பிரச்னை எனக்கு புரிந்தது; நான் அவ்வளவு தூரம் வேத்து மனுஷியாயிட்டேன்; ஊருக்கும், உலகுக்கும் நாம பழைய காதலர்கள்; ஆனால், இப்போ நாம ரெண்டு பேரும் பொறுப்புள்ள குடும்ப உறுப்பினர்கள்; எனக்கு மனிதாபிமானம் கூட இருக்காதுன்னு நினைத்து தானே என்ட சொல்லவில்லை;”

ராஜேஷ்" இல்ல , மீனா, உன்னை சிரமப் படுத்த வேணாமேன்னு தான் ...” வார்த்தைகளை விழுங்கினான்;

மீனா, " சரி விடுங்க; உங்க தங்கை சுமித்ரா வோட தோழின்னாவது நினைத்து நான் சொல்றத கேளுங்க; என் பிரின்ட் ஓட அண்ணன் குழந்தைக்கு முடியல; நாம கண்டிப்பாக உதவி செய்யணும்னு பார்த்தி கிட்ட நேற்றே பேசிட்டேன்; அவர் நிச்சயம் என்னை புரிஞ்சுப்பார்; அவரை ஒரு முறை வந்து பாருங்க; இந்த நேரத்துல தன்மானம் அது இதுன்னு யோசிக்காதிங்க; ப்ளீஸ் எனக்காக; அவரை பார்த்து பேசுங்க; நானே காசு தரலாம்; ஆனால் இதுவரை அவர் அறியாமல் நான் எதுவும் செய்ததில்லை; அவரும் நான் அறியாமல் எதுவும் செய்யமாட்டார்; "
( இந்த உரையாடலை இருவரும் கேட்டனர்; இப்போ என்ன சொல்ற என்பது போல பார்த்தி ராஜேஷ் யை பார்த்தான் )
ராஜேஷ், " சரி மீனா, நான் அப்புறமா கூப்பிடறேன் ",என போன் யை கட் செய்தான் ;
பார்த்தீபன், " நேற்று மீனு சொன்னதும், 3 லட்சம் ருபாய்க்கு செக் எழுதி வைத்துவிட்டேன்; நீங்க தான்னு எனக்கு இப்போ தான் புரியுது; "
ராஜேஷ், " சார், உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு; உங்க முன்னாடி நான் ரொம்ப கீழானவனாயிட்டேன்; உங்க உதவிக்கு நான் தகுதி இல்லாதவன் ; நான் வரேன்;
“ஒரு வகையில் மீனா ரொம்ப கொடுத்து வைத்தவள்; கணவன் மனைவி என்கிற உறவு இத்தனை வலிமையும், வாய்மையும் உடையது என்பதை இப்போது தான் புரிந்து கொள்கிறேன்; ராமாயணத்தில் ராமர் கூட சீதையை தீ குளிக்க செய்தார்; ஆனால் நீங்க ராமனை விட ஒரு படி மேல ";

பார்த்தீபன்," என் தாத்தா சொல்வார், ராமன் ஏன் சீதையை தீ குளிக்க செய்தார் என்று?", ராமன் அதற்கும் இராமாயணத்தில் விளக்கம் அளிக்கிறார் : சீதையை இலங்கையில் இருந்து அப்படியே வீட்டுக்கு அழைத்திருந்தால் சீதை தனது சுய பச்சாதாபத்தில் எனக்கு அடிமை யாக வே இருந்திருப்பார்; அவரது தாழ்வு மனப்பான்மையை நீக்கி அவளுக்கே அவளது மேன்மையை உணர்த்தி இப்போதும், எப்போதும் சீதை களங்கமற்றவள்; குற்றமற்றவள் என்ற சீதையின் புனித தன்மையை உலகுக்கு எடுத்து காட்டவே தீ குளிக்கச் செய்தேன் என்று, ராமனே கூறுகிறார்;
மீனா வை எனக்கு நல்லதொரு பெண்ணாக, அன்பின் உயிர்ப்பாக கொடுத்த உங்களுக்கு ஒரு கைமாறாக என் உதவியை ஏற்றுக் கொள்ளுங்க;”

ராஜேஷ், " சார்.. நீங்க கடவுள் தான்; மதங்களுக்கும் அப்பாற்பட்ட கடவுள்”;

பார்த்தீபன், " நாம் தெய்வங்களாக வேண்டாம் ; நாமெல்லாம் மனிதர்கள்; விலங்குகள் கூட பசி இருந்தால் தான் மற்ற விலங்கை வேட்டையாடும்; ஆனால், மனிதர்கள் எப்போதும் பிறரை குறை சொல்லிக்கொண்டும், பிறர் வாழ்வை கெடுத்துக் கொண்டும் , வாழ்வது வாழ்க்கையா ?

மனிதாபிமானம் என்பது பிற உயிரை நாம் அபிமானதுடன் நடத்துவது; பிறர் கஷ்டம் கண்டு உடன் உதவி செய்வது ;
மனிதனை மனிதனே தனது தீய சொற்களால், செயல்களால் துன்புறுத்தாமல் இருப்பதுவே மிகப் பெரிய கடவுள் பக்தி; ஒவ்வொரு மதமும் இதை தான் வலியுறுத்துகிறது; தனது மதத்தை மதிக்கும் எந்த ஒரு மனிதனும் பிறரின் மதத்தில் குறை காண மாட்டான்; எப்படி, உன் தாய் உனக்கு சிறந்தவளோ, அது போல அவரவர்க்கு அவரவரின் தாய் சிறந்தவள்; அதுபோல தான் அவரவர் கடவுள்களும்; படைப்பும் ஒன்றே, படைத்தவனும் ஒன்றே; உங்கள் குழந்தையும் நன்றாக இருக்கணும்; எங்க குழந்தையும் நன்றாக இருக்கணும் ;
ராஜேஷ்,” (பார்த்தீபன் கையில் இருந்த செக் கை வாங்கி கொண்டான்) "நல்லது சார்; இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்; நன்றி வருகிறேன்; "
பார்த்தீபன் " கவலைபடாமல் போயிட்டு வாங்க; எப்போதும் மீனு வுக்கு நீக்க நல்ல சீனியர் தான் " என்று புன்னகைத்தான்;
-----
சுமித்ரா, அண்ணா, வந்துட்டியா ? எப்போ வருவேன்னு காத்துட்டு இருந்தேன், போன வேலை முடிந்ததா ?;
ராஜேஷ்," சொல்லுமா", என்று சிரித்தான் ;
சுமித்ரா, அண்ணா, என் பிரென்டு மீனா நேற்று போன் பண்ணிருந்தாள்;
உன்னையும் விசாரித்தாள்; சொல்ல மறந்துட்டேன்;
ராஜேஷ், " நல்ல வேலை செய்தாய்; நீ மறந்ததனால் தான் மனிதத்தையும் , மனிதர்களையும் நான் காண முடிந்தது; "
( ராஜேஷின் மனதுக்குள் பார்த்தீபனின் வார்த்தைகள் வந்து போயின…
“என்னை பொறுத்த வரை, வாழ்க்கை என்பது பயணம் மட்டுமல்ல; ஒரு பயிற்சி; ஒரு முயற்சி; பயிற்சியிலும், முயற்சியிலும் தவறு நடந்தால் அதையே கூறிக் கொண்டு இருந்தால் வாழ்கை நரகம் தான்; இறை அருள் இன்றி நாம் நமது உறவுகளை அமைக்க முடியாது; அப்படி இறைவன் கொடுத்த உறவில் குறை கண்டால் அவன் வாழ்க்கை நிச்சயம் தோற்கும்; அந்த அர்த்தமான சிந்தனையில் முகம் மலர்ந்தான்;)

( அண்ணன் முகம் மலர்ச்சியை கண்டு சுமித்ராவுக்கும் மகிழ்ச்சி; )

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (20-Jul-20, 9:16 pm)
சேர்த்தது : Samyuktha
பார்வை : 339

மேலே