காதல் சொல்லி விட கூடாது

காதலை சொல்லுவதற்கு
காதல் ஒன்றும் வார்த்தை அல்ல;
காதலை சொல்ல விட்டாலும்
காதல் சொல்லி கொள்ள வேண்டும்..!

நான் உனக்கும் நீ எனக்கும்
சொல்லால் தான் காதலா..?
நான் உனக்கும் நீ எனக்கும்
சொல்ல விட்டாலும் காதல்
காதல் தான்...!

காதல் சொல்லிவிட்டால் இன்பம்
தான்..!
காதல் சொல்ல விட்டாலும்
பேரன்பம் தான்..!

பேரண்டம் எல்லாம் பெரும்
முயற்சி எடுத்தாலும்...!
பேரானந்தம் எல்லாம் பெரும்
மகிழ்ச்சி கொண்டாலும்..!

மனம் நிறைய காதல்
வைத்திருத்தாலும்...!
கனம் நொடி கூட சொல்லாத
காதலை சொல்லி விட கூடாது.!

காலம் முழுவதும் காதலுக்கு
என்றோ வாழும்..!
காதல் முழுவதும் அவளுக்கு
என்றோ வாழும்...!

இந்த பேரன்பம் எத்தனை காதலர்களுக்கு
கிடைத்தது உண்டு;
இத்தனை இன்பமாய் இங்கு எந்த
காதல் வாழுந்துண்டு..!

வாழும் போதெல்லாம் காதல்
சொல்லி கொள்ளமால்..!
சாகும் போது மட்டும் ஒரு முறை
காதல் சொல்லி கொள்ளலாம்!

அதுவரை புரிதலுடன்
காதலுடன் கனவுடன்
நீயும் நானும் காதல்
செய்து கொண்டே இருக்கலாம்..!
♥️💜💚💛💙🤗💙💛💚💜♥️

✍️பாரதி

எழுதியவர் : பாரதி (24-Jul-20, 6:11 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
பார்வை : 295

மேலே