காற்றே காதலாய்

காற்றே காதலாய் கடந்து போகையிலே
கண்களை திறந்து நினைவில் சாய்ந்துவிட
நழுவும் இதயம் தாமரை இலையின்
தண்ணீர் போல தத்தளித்து போகிறது ..
அன்பான காற்றும் அரவணைத்து கொஞ்ச
அன்பின் உச்சத்தில் அழகாய் நடனமாட
இன்பத்தின் விரிவை இனிமையாய் நுகர்ந்து
பட படவெனக் மனமும் பறக்கிறது
அகிலன் ராஜா கனடா

எழுதியவர் : அகிலன் ராஜா (28-Jul-20, 9:04 pm)
Tanglish : kaatre kathalaai
பார்வை : 204

மேலே