முகதூல் பதிவு 56

தமிழகத்தின் தலைமகளின் தலைமகனே....
தேவர்கள் போற்றும் இந்திரனா நீர்
பாவலர் போற்றும் சந்திரனா நீர்
நாவலர் போற்றும் தந்திரனா நீர்
இல்லை இல்லை
பாமரர் போற்றும் காவலர் நீர்
மறையவர்கள் போற்றும் மாதங்கம் நீர்
மாதர்கள் போற்றும் மாமகன் நீர்
மண்மகன் போற்றும் மாமழை நீர்

செங்கோல் தவறா வெண்கோல் வேந்தனே...
முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி
முகில் கண்டு ஆடும் மயிலுக்கு
நன்பட்டு போர்த்தினான் பேகன்
சாவா வரம்தரு நெல்லிக்கனியை
தமிழுக்கு ஈந்தான் அதியமான்
இக்கடையேழு வள்ளல்களை யாம் அறியோம்
யாம் கண்கண்ட கலியுக வள்ளல் நீர்

வாக்குறுதி தந்து வழிமறந்து போவார் பலர்
உம் சொல்லுறுதி கண்டு வியந்தோம் யாம்
தேடாது கிடைத்த திவ்ய பிரபந்தமே
வாராது வந்த வரம்தரும் சாமிபோல்
எதிர்பாராது உதவிக்கரம் நீட்டினீர்
எதிர்பார்த்தோம் உம் வெற்றியை
காத்திருந்தோம் பூத்திருந்தோம்
மலர்ச்சி பெற்றோம் மகிழ்ச்சியுற்றோம்... இன்று
எழுச்சி பெற்றோம் உம் வெற்றியால்.....

வெற்றித்தாயின் முதல் மகனே!
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
சம்பவம் மாறும் சரித்திரம் மாறும்
மாறாது மாறாது உம் குணம் என்றென்றும்
மறையாது மறையாது உம் புகழ் என்றென்றும்
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு
நீவீரும் உம் தலைமையும் வாழ்வாங்கு வாழ்ந்திட
நாளும் அகமகிழ்ந்து உளம் நிறைந்து வாழ்த்துகிறேன் !

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (29-Jul-20, 7:35 pm)
பார்வை : 28

மேலே