ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் -- உண்மையான பொருள் என்ன

ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்பது ஒரு பழ மொழி . உண்மையில் ஆடிக் காற்றில் அம்மி நகருமா ? அப்படியென்றால் ஏன் இந்த பழமொழி ? நம் முன்னோர்கள் தவறாக சொல்லி வைத்திருக் கிறார்களா ?

ஆடி மாதத்தில் அதி வேகமாக காற்று அடிக்கும் , தென்மேற்கு பருவக் காற்றும் மழையும் மிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்து செய்திதான் . ஆனால் எவ்வளவு காற்று அடித்தாலும் அம்மி இம்மி அளவும் நகராது என்பதே உண்மை . அடிக்கும் முன் மாதங்கள் கோடை காற்று வீசும் மாதங்கள் .

சித்திரை, வைகாசி மாதங்களில் கத்திரி வெயில் கடுமையாக இருக்கும் . அம்மாதகளில் அடிக்கின்ற வெயிலின் தாக்கத்தால் பலருக்கும் அம்மை நோய் வரும் . ஆடியில் வரும் காற்றும் , சாரல் மழையும் குளிர்ச்சியை ஏற்படுத்தி பூமியின் சூட்டை தணிக்கும் . அதனால் அம்மை கண்டவர்கள் முழுமை அடைந்து குணம் பெறுவார்கள் . ஆடிக்குப் பின் அம்மை நோய் போய்விடும் .அதனால் தான் " ஆடிக் காற்றில் அம்மையும் நகரும் " என்றார்கள் . ஆனால் அந்த சொல் தொடர் திரிந்து காலப்போக்கில் " ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் " என்றாயிற்று . இனிமேலாவது பழமொழிகளின் சரியான பொருளை அறிந்து பயப்படுத்துவோமாக . நம் அடுத்த தலைமுறைக்கு அதை சரியான பொருளில் கடத்துவோமாக .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (30-Jul-20, 6:35 pm)
பார்வை : 971

சிறந்த கட்டுரைகள்

மேலே