தவறு

தவறென் றுணர்ந்தே தவறதனைச் செய்யத்
தவறியவர்க் கின்பம் தனமே - தவறாய்
தெரிந்தும் தவறா ததனைத் துணிவாய்
புரிந்தோர்க்குத் துன்பம் துணை.

விளக்கம்:
ஒருவன் தெரிந்தும் தவறுகளைப் பலமுறை செய்தான் என்றால் அவனுக்கு வாழ்வில் நிம்மதி இல்லை. ஒருவன் தவறுகளை அடையாளம் கண்டு செய்யாமல் கடப்பான் என்றால் அவனுக்கு வாழ்வில் என்றுமே இன்பம் தான்.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (30-Jul-20, 9:20 pm)
Tanglish : thavaru
பார்வை : 45

மேலே