இப்பிறப்பில் என்ன செய்தேன்

இப்பிறப்பில் என்ன செய்தேன்
என்று பார்த்தால்
பாவமின்றி இங்கே ஏதுமில்லையே..!

ஒப்பற்றது இப்பிறவி என
ஒப்பற்ற பெரியோர் சொல்லக் கேட்டதும்ண்டு..

முப்பிறவி செய்த வினையே
இப்பிறவி எடுத்து இங்கு வந்தது நானும்..

இப்பிறப்பில் என்ன செய்தேன்
என்று பார்த்தால்
பாவமின்றி இங்கே ஏதுமில்லையே..

கள்ளமில்லா வெள்ளை மனம்
கொண்டு இங்கு வாழ்ந்தாலும்,
பந்தம் இல்லா வாழ்வு தனில்
ஈசனே உண்மை என தொழுதாலும்,

சொத்து சுகம் வேண்டாமென
அவனடித் தேடி அலைந்தாலும்
செய்த பாவம் அது
ஆட்டிப் படைத்து கொல்லுதே..

இப்பிறப்பில் என்ன செய்தேன்
என்று பார்த்தால்
பாவமின்றி இங்கே ஏதுமில்லையே..

வெற்றுடம்பாய் வந்தனான்
இச்சை துணி உடுத்தினேன்..,
ஒன்றும் இல்லா வாழ்வு தனில்
எதற் எதற்கோ ஏங்கினேன்..,

சுற்றம் என்றும்
சொந்தம் என்றும்
சூதுகளில் மாட்டினேன்..,
பற்றுக்களால்
பாசங்களால்
பாடம் கற்றுக் கொள்கிறேன்..

இப்பிறப்பில் என்ன செய்தேன்
என்று பார்த்தால்
பாவமின்றி இங்கே ஏதுமில்லையே

பூசை செய்தும்
ஈசன் அவன்
மனம் இறங்கியதுமில்லை..
நன்மை செய்ய
மனம் இருந்தும்
இன்னும் மனிதன் ஆகிடவுமில்லை..

புகழ்ச்சி அது கேட்டு
உருகியதுமில்லை
நீச்சத்தில் நீங்கா இதயம்
மருகியதும் இல்லை..
இதயம் மருகியதும் இல்லை...

இப்பிறப்பில் என்ன செய்தேன்
என்று பார்த்தால்
பாவமினிறி இங்கே ஏதுமில்லையே..

கவிதை என எழுதி வைத்தேன்
இன்று பார்த்தால் எல்லாம் கிறுக்கல்களே..
காசுக்காக திரிந்தலைந்தேன்
எண்ணிப்பார்த்தால் அத்தனையும் காகிதக் குப்பைகளே..

தீமை என்று தெரிந்தும்
தீண்டாமல் இருந்ததில்லை
பாவம் இவன் பைத்தியம் என
என்னை என் ஈசன் மன்னித்ததுமில்லை

எத்தனையோ....
எத்தனையோ பாவங்களை ஏற்று
நான் செய்த போதும்..
முற்பிறப்பில் செய்த வினை
இங்கு வந்து சுட்ட போதும்..
இனியாவது
இப்பிறப்பில் என்னை மன்னித்து
ஆட் கொள்வாயா
என்னப்பன் ஈசனே...
உன்னையே நித்தம் தொழுது
நிற்கும் இந்த ஜீவனே..

இப்பிறப்பில் என்ன செய்தேன்
என்று பார்த்தால்
பாவமின்றி இங்கே ஏதுமில்லையே..

என்றும் என்றென்றும்...
ஜீவன்

எழுதியவர் : ஜீவன் (1-Aug-20, 7:36 pm)
பார்வை : 169

மேலே