அவள் மண்ணில் வரைந்த கோலம்

'''

வண்ண வண்ண கோலம் போட்டாள்
வனிதையவள் எண்ணத்தில் வைத்து பூட்டியதை
எண்ணத்தில் அவள் மயில்கண் கண்டாளா
கோலமயில் கண்ணல்லவோ அந்த கோலம்
பெண்மயில் இவள் தான்கண்ட ஆண்மயிலின்
கண்ணை கோலம் ஆக்கினாளோ கோலத்திலே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Aug-20, 3:12 pm)
பார்வை : 292

மேலே