யானை வெட்கப்படுவத்தைப் பார்த்திருக்கிறீர்களா -- கலித்தொகை காட்டுகிறது

யானை வெட்கப் படுவதாக கலித்தொகை செய்யுள் ஒன்று காட்டுகிறது . சற்று வேறுபட்ட , நாம் கேட்டறியாத , பார்த்திராத செய்தி இது . தமிழிலக்கியங்களில் வேறுபட்டு பல செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன . யானை வெட்கப்படுவதை கீழே பாப்போம் .

கலித்தொகை பாடல் ஒன்று இதோ :

கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கின் துஞ்சும் யானை
நனவில்தான் செய்தது மனத்தது ஆகலின்
கனவில் கண்டு கதுமென வெறிஇ
புதுவதாக மலர்ந்த வேங்கையை
அது என உணர்ந்து அதன்
அணிநலம் முருக்கி ,
பேணா முன்பின் தன் சினம் தணிந்து
அம்மரம் காணும் பொழுதின் நோக்கல் சொல்லாது
நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட !

அந்த யானைக்கும் புலிக்கும் பெரிய சண்டை நடந்தது . யானையின் ஆவேசத்தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத புலி தோற்றுப்போய் ஓடி விட்டது . களைப்படைந்த யானை அந்த உயர்ந்த மலைச்சாரலில் ஒரு ஓரத்தில் படுத்துத் தூங்க ஆரம்பித்தது . தூக்கத்திலும் அதன் ஆவேசம் அடங்கவில்லை . கனவிலும் அந்தப் புலியுடன் சண்டை தான் .

தூக்கக்கலகத்தில் பக்கத்தில் இருந்த வேங்கை மரத்தை புலி என நினைத்து அடித்து நெருக்க ஆரம்பித்தது . சினம் குறைந்து பார்த்த போது தான் தாக்கியது புலியை அல்ல , வேங்கை மரத்தை என்று . அந்த மரத்தை தலை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் வெட்கப்பட்டது என்று கலித்தொகை காட்டுகிறது .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (5-Aug-20, 12:54 pm)
பார்வை : 22

மேலே