என் பிரியத் தோழி

Happy friendship day!❤️💐😍🌹

நட்பு என்பது அழகிய பூந்தோட்டம் .....அதில் என்னைப் பொறுத்தவரையில் அத்திப் பூத்தாற்போல பூக்கள் மலரும்..... ஆனால் எதுவும் நிலைத்ததில்லை.... பள்ளித் தோழிகள் மற்றும் கல்லூரித் தோழிகள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாது..... தேட முயற்சித்துத் தோற்றுப்போனேன்.....
பணியிலும் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் அனைவரிடமும் அன்பாக இருந்தாலும்.... பணி நிமித்தம் சில நேரங்களில் கடுமையாய் நடக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாலும் தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் மட்டும் நெருங்கிப் பழகவும் முடியாத நிலை என்பதால் நட்பு என்ற பூ பூக்க வாய்ப்பில்லை ....

யாரிடம் முகத்திற்கும் அகத்திற்கும் திரைபோடாது பேச இயல்கிறதோ.... யார் நம் உணர்வுகளை அப்படியே உணர்கிறார்களோ.... யார் நம் முன்னேற்றம் கண்டு பெருமிதம் கொள்கிறார்களோ.... யார் நம்மோடு உரிமையுடன் சண்டையிடுகிறார்களோ.... அவர்களிடம் மட்டுமே நம்மால் நட்பாய் இருக்க முடியும்....

அப்படி ஒரு நட்பு எனக்கும் உண்டு.... நான் தீவிர ஆஸ்துமாவில் அவதிப்படும்போது தன் பிஞ்சுக் கைகளால் என் முகம் துடைத்து ... என் கூந்தலை கட்டிவிட்டு .... அருகிலேயே அமர்ந்து என் சிறுசிறு ஏவல்களை செய்பவள்...... படித்தக்கதைகள் ரசித்தப் பாடல்கள் கல்லூரியில் காலை முதல் மாலை வீடுவந்தடையும் வரை நடந்த நிகழ்வுகள் ஒன்று விடாது ஒளிவுமறைவின்றி என்னோடு பகிர்ந்து கொள்பவள்......என் செயல்களை முழுமனதோடு பாராட்டுபவள்.....சரியாகப்படவில்லை என்றால் உடனே இது சரியில்லை என்று இடித்துரைப்பவள்.... ஆரம்பக் காலத்தில் என் தந்தைக்குப் பின் என் கவிதையை ரசித்து மனமுவந்துப் பாராட்டுபவள்.... யாரிடமாவது புதிதாய் பழகினால்.... உடனே அவர்கள் யார் ?எப்படிப்பட்டவர்? உன்னோடுப் பழக உகந்தவர்களா? என்று கேட்டறிந்து தணிக்கை செய்பவள்...யாரிடம் பேசினாலும் குழந்தைப் போல் மனதில் இருப்பதை கொட்டிவிடாதே.... எல்லோரையும் எளிதாக நம்பாதே என்று அடிக்கடி எச்சரிக்கை செய்பவள் ..... என் தாயாய் ...நல் சகோதரியாய்.... மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள நல்லத் தோழியாய் அன்று முதல் இன்றுவரை எனக்கு உற்றத் துணையான அழகானத் தோழி என் மகள் வானதி!

Happy friendship day Rajathi!

எழுதியவர் : வை.அமுதா (5-Aug-20, 4:21 pm)
பார்வை : 63

மேலே