அவள் நினைவில் பித்தாய் அவன்

உயிருக்குயிராய் காதலித்தேன் உன்னை ஆயிரம்
நிலவுகள் உன்னில் கண்டு உன்னை என்
நினைவெல்லாம் என்று நினைத்து -இப்போது
' என்னை மறந்துவிடு' என்று கூறி நீயோ
விலகி போய்விட்டாய் என்நினைவுக்கோ உன்னை
நினைக்கத்தான் தெரிகிறது மறக்க தெரியலையே
பித்தாய் அலைகின்றேனடி இன்று நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-20, 5:29 pm)
பார்வை : 255

மேலே