பாவம் கிளி

பேசும் பறவைதான் கிளி அது
பேசிடும் தன் மொழியில் தனது
கூட்டத்தாரோடு பாவம் கிளி அதை
பிடித்து கூட்டில் அடைத்து உன்மொழியில்
பேச வைக்கப் பார்க்கின்றாய் அது
தன் மொழியை மறந்து நீசொன்னதையே
சொல்லும் கிளியாகிறது .... சுதந்திரம்
பறிபோன அடிமையைப் போலவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-20, 6:29 pm)
Tanglish : paavam kili
பார்வை : 40

மேலே