புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 44---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௪௪

431. சிலருக்கு நினைத்தபடி வாழ்க்கை அமைந்து விடுகிறது
சிலருக்கு நினைத்து வாழ்வதே வாழ்க்கையாகி விடுகிறது.

432. உன் மனதை ஒருநிலைப் படுத்த நீதான் முயற்சி செய்ய வேண்டும்
வெளிப்புறத்தில் உள்ள எதுவும் உன்னை ஒருநிலைப் படுத்தாது.

433. உயர்வுக்காக ஒருவன் உழைக்கும் வேளையில்
உணவுக்காக ஒருவன் உழைக்கிறான்.

434. காலம் என்பது அதிகாரத்தைப் போல
சிலரைக் கைத்தூக்கி விடும்
சிலரைக் கைக்கழுவி விடும்.

435. எந்த ஒரு செயலிலும் முதலடி வைப்பதற்குத் தான் தயக்கம் ஏற்படும்
முயன்று வைத்துவிட்டால் முன்னேற்றத்தை நோக்கியே பயணம்.

436. அடுத்தவரின் மேல் சேற்றை அள்ளிக் கொட்டியவன்
தன் கைகளில் சேறு இருப்பதை மறந்து விடுகிறான்.

437. நான் என்ற நினைப்பு உள்ளத்தில் நிலைத்து விட்டால்
உன்னை அறியாமல் உன் மதிப்பை நீயே கெடுத்துக் கொள்வாய்.

438. நீ களத்தில் இறங்கி விட்டாய் என்றால்
உன் வெற்றிக்கும் தோல்விக்கும் நீயே பொறுப்பு.

439. சூழ்ச்சிகள் செய்து வெற்றிகளைக் கண்டவன்
ஏதோ? ஒரு இடத்தில் பெரும் தோல்வியை அடைவான்.

440. ஒரு செயலில் ஆழ்ந்து பயணிக்கும் நேரத்தில்
எவரேனும் நல்லெண்ணத்தில் இடைமறித்தாலும் ஓர் எரிச்சல் உண்டாகவே செய்யும்.

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (6-Aug-20, 3:21 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 42

மேலே