நிலவு வான் அவள் நான்

நிலவுக்கும் மேகத்திற்கும் ஏதோ ஓர்
கலவு அது புகையும் பூசலோ
அல்லது காதலில் ஊடலோ தெரியலை
வீசும் குளிர்காற்று வானில் ஏனோ
பௌர்ணமி நிலவு பவனி வரவில்லை
இது என்ன ;அமாவாசை' பௌர்ணமியில்
ஏற்கனவே காதல் தோல்வியில் இருண்டிருந்த
என்னுள்ளத்தில் இப்படியோர் இருளா
இப்படி முற்றத்தில் நிலவைப் பார்க்க
வந்த நான் கண்மூடி சிந்திக்க
மூடிய கண்களைத் திறக்க வைத்தது
அந்த ஒளி நிலவொளியோ என்று
நான் கண்விழிக்க என்னெதிரே என்னை
விட்டுப்போன காதலி என்முன்னே தலைகுனிந்து
நிற்க்க கண்டேன் ;;;;;;;;;
வானிலோ கார்மேகம் உடலால் நிலவை மறைக்க
இங்கு மண்ணிலே ஊடலில் விட்டு சென்ற
என்னிலவு என்னை வந்தடைந்ததே ஆம்
அவள் கார்மேகம் என்னை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Aug-20, 2:19 pm)
பார்வை : 157

மேலே