நொந்த பார்வை

சக்தி கேட்டு சாமியை வேண்ட,
பக்தியோட ஆலயம் போனேன்.
மங்கள வினாயகர் கொஞ்சம்,
மங்கலாத் தெரிஞ்சார் எனக்கு.

விவரமான சனங்ககிட்ட,
விரிவா விசாரிச்சு,
விசாலாட்சி டாக்டர்கிட்ட,
வேகமாப் போனேன்.
நல்லகண்ணுன்னு பேரெழுதி,
நாற்காலில உட்கார வச்சான்.
நாலு மணிக்கு முன்னாலே.

சொட்டு மருந்து விட்டு, அவன்
சிட்டாப் பறந்து விட்டான்
கண்ணத் துறக்காம நா இருந்தா,
கண் பாக்க முக்கா மணி ஆகுமாம்.
துறக்காதன்னு சொன்னதால,
துறந்து துறந்து பாத்து வச்சேன்.

அஞ்சு மணிக்கு அசைஞ்சு
வந்தான்.
கொஞ்சம் கண்ணத் துறக்கச்
சொன்னான்.
துறந்து பார்த்தது தப்புன்னு,
மறுபடியும் சொட்டு விட்டு,
திரும்பவும் ஓடி விட்டான்.

எட்டு மணிக்கு உள்ள விட்டான்.
சட்டுன்னு நான் உள்ள போனேன்.
எதிரே பெண் மருத்துவர். அவர்
எதிரே, கண் பார்க்கும் கருவி.

கண்ணுல என்ன ஆச்சுன்னு
கருத்தாக் கேட்டு வைச்சார்
இருப்பதை சுருக்கமாய்ச்
சொன்னேன்.
கண்ணோடு கண்ணினை
நோக்கினார்.
கண்ணுல ஒளி பாய்ச்சி,
கவனமா பார்த்து வச்சார்.

விளங்காத கையெழுத்தில்,
வேகமா கிறுக்கி வைச்சார்.
கட்ட வேண்டிய பணம் பற்றிக்
கேட்டேன்
கட்டிடத்துக்கும் சேர்த்து காசு
கேட்டான்.

பத்து ரூபா கொடுத்திருந்தா
பகவான பக்கத்தில் காட்டி
பரிவட்டமே கட்டிருப்பான்.
அவசரப்பட்டு கண்ணக் காட்டி,
அல்லல்பட்டு நொந்து வந்தேன்.

ச.தீபன்
நங்கநல்லூர்
94435 51706

எழுதியவர் : தீபன் (7-Aug-20, 9:13 pm)
சேர்த்தது : Deepan
Tanglish : nondha parvai
பார்வை : 67

சிறந்த நகைச்சுவைகள்

மேலே