அன்பில் தோல்வி ஆரவாரம் இல்லா வெற்றி

வீண் பேச்சு விதண்டாவாதம்
வெற்றியை தந்தாலும்
விவேகம் இல்லாதோர் செயல் அது
உறவுகளிடம் பற்றை அறுத்திடும்
நல்ல நட்பு உள்ளங்களை குலைத்திடும்....

பொறுப்பது
பொறுப்புள்ளவர்கள் குணம்
தோல்வியை பொருட்படுத்தாது அவர்மனம்
பல உறவுகளை வெற்றிகொள்ளும் அனுதினம்

பொறுத்தார் அன்பு புரண்டோடி வெல்லும்
வெறுப்பார் அறிவு வீரியமாகிக் கொல்லும்
அன்பில் தோல்வி ஆரவாரம் இல்லா வெற்றி
வம்பின் வெற்றி வரிந்துக்கட்டிய தோல்வி

எழுதியவர் : வை.அமுதா (7-Aug-20, 10:42 pm)
பார்வை : 104

மேலே