காதல் கானல்நீர் அல்ல

விரும்பியே தொலைகிறேன் உன்னிலே
இணைச்சேரவே  துடிக்கிறேன் வாழ்விலே
மனக்கடலிலே  தத்தளிக்கிறேன் கரைச்சேரவே
நினைவிலே உழல்கிறேன் துணையாகவே
மனச்சிறையில் வசிக்கிறேன் நீயின்றியே
முள்வெளியில் நடக்கிறேன் உனக்காகவே
கண்ணீரில் கரைகிறேன் நீயின்றியே
மனவலிகளை நிதம்சுமக்கிறேன் உனக்காகவே
தாயாகவந்தவனே எங்கே நீ சென்றாய்
தள்ளாத தனிமையில் தவிக்கிறேன் அனலாய்
இளமை  நம் வாழ்வில்  கானலானது முதுமையின் நாட்கள் ஏனோ நீள்கிறது
புரையோடியப் புண்ணில் புழுவாய் நெளிந்து
வலியை அதிகரிக்கிறது ஒவ்வொரு பொழுது
உன் வருகைக்கு எதிர்ப்பார்த்து
என் வாழ்நாட்கள் குறைகிறது வருவாயா! அன்பே நீயும் விரைவில் இணைச்சேருமா! நம் காதல் மணவறையில்
பொல்லாத முதுமை
என்னைக் கொல்லும் முன்னே வருவாயா! அன்பே!
என் வாழ்வில் ஒளிவீச காத்திருக்கிறேன் நானும் மரணப்படுக்கையில்
காயங்கள் ஆறாது வலக்கிறது
என் மனவறையில்
இறந்தாலும் பிரியாது  உன் மீதான  நேசம்
கல்லறையிலும் விழித்திறக்கும் அன்பின் பூ வாசம்

சரவிபி_ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (8-Aug-20, 5:56 pm)
பார்வை : 70

மேலே