ஒரு நூதன காதல் மோதல்

இது ஒரு நூதன காதல் மோதல்
நேற்று என்னைப் பார்த்து புன்முறுவல்
தந்து போனவள் இன்றும் வந்தால்
அவளுக்கு தந்திடுவேன் இந்த பூச்செண்டு
என்று எண்ணியே ஒரு ரோசா செண்டு
கையில் ஏந்தி நின்ற நான் இன்றும்
கண்டேன் அவளை நெருங்கி ரோசா செண்டு
கொடுக்க .... அவள் என்மீது ஒரு
வெண்பா தொடுத்துவா நாளை தேன் தமிழில்
அதுவே என்னை மகிழ்விக்கும் நம்மிடையே
காதலெனும் உறவையும் தருமே என்றாள்....

பூச்செண்டை வாங்கிவிட முடியும் இந்த
வெண்பாவிற்கு நான் எங்கு போவேன்
ஏதோ தெரிந்த தமிழில் சில வரிகளை
கவிதை என்று எண்ணி கிறுக்கி அதை
எடுத்து சென்று அவளுக்கு தந்தேன்
அடுத்த நாள் .... அந்த கிறுக்கலையும்
கையில் வாங்கி பிரித்து படித்தவள்
ஏனோ சிரித்தாள் .... அது காதல் சிரிப்பா,,,,????

நான் கிறுக்கியது வெண்பாவானதோ... தெரியலையே
இன்றும் அவள் வருகை எண்ணி காத்திருக்கும் நான்

அவள் வருவாளா என்னை வெண்பா கவிஞனாக்க..!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Aug-20, 9:42 pm)
பார்வை : 95

மேலே