அவளை எப்படி மறக்க முடியும்🌹

அவளை எப்படி மறக்க முடியும் 🌹

அயித்த மக வந்துட்டா
ஓடுடா சின்னராசு
நண்பன் சொன்னது தான் தாமதம்
மீன் தூண்டியலை அப்படியே ஆற்றங்கறையில் போட்டு விட்டு
நாலு கால் பாய்சலில் வீட்டை நோக்கி மூச்சிரைக்க ஓட்டம்.
பவளமல்லி கொடி பவ்வியமாக நின்றிருத்தாள்.
தாமரை முகத்தால்
தளிர் கொடியன நின்றிருந்தாள்.
முத்தான பல்வரிசைக்காரி  உதட்டோர புன்னகையை என் பக்கம் வீசினாள்.
மயில் இறகால் மனசை வருடிய சுகம்.
மாயம் செய்யும் கண்களால்
மனதை கொய்து விட்டாள்.
ஏதோ ஒரு இன்ப அதிர்வு இதயத்தில் ஓயாமல் ஒலித்தது.
உள்ளமேல்லாம் நிறைந்த அவளை நொடி கூட பிரிய மனம் இடம் தரவில்லை.
எப்படி அவளிடம் பேசுவது.
எதை சொல்லி ஆரம்பிப்பது.
அவ்வப்போது அவள் கயல் விழிகளால்
என்னை கதிகலங்க செய்தாள்.
ஆனந்தத்தின் உச்சம் தொட்டு அவ்வப்போது
மெய் சிலிர்தேன்.
குட்டி போட்ட பூனை என
வீட்டுக்குள்ளேயே வட்மிட்டேன்.
ஒரு வார்த்தை அவளாக பேசமாட்டாளா?
நான் ஏன் அவளிடம் தைரியமாக பேசக்கூடாது?
ஏதோ ஒன்று தடுக்கிறது. 
ஆனால் பேச வேண்டும் என மனம் துடிக்குது.
தோட்டத்தில் மாங்காய்  பறிக்க அவள் முற்பட்டாள்.
நாணல் இடை உள்ள அவள் எவ்வளவு எக்கியும் அவளால் பறிக்க இயலவில்லை.
இதுவே நல்ல சந்தர்ப்பம்
மடமடவென்று மாமரத்தில் மீது ஏறி
மாங்காய் தனை பறித்து போட்டேன்.
மகிழ்ச்சியில் துள்ளி குதித்து அவள்
'நன்றி' என்றாள்.
உனக்கு வேண்டாமா? என்றாள்.
இல்லை பராவாயில்லை நீ சாப்பிடு என்றேன்.
அவள் கடித்த மாங்காய் தனை வலுகட்டாயமாக
என் கையில் தினித்து சாப்பிடு என்றாள்.
என்ன நடக்குது.
அதிசயமே வந்து உணவு உட்டுது.
நல்லாயிருக்கா அவள் கேட்டாள்
தேன் தடவிய மாங்காய்  சுவைக்காதா என்றேன்.
சிரித்து விட்டாள்.
என்ன படிக்கிற அவள் கேட்டாள்.
பத்தாம் வகுப்பு என்றேன்.
நீ, நான் கேட்டேன்.
ஒன்பதாவது அவள் பதிலலித்தாள்.
நீ ரொம்ப நல்ல பையன் என்றாள்.
தலை சுற்றியது.
என்ன நன்னடத்தை சான்றிதழ் தருகிறாள்.
ஏன்? என்றேன்.
என் குறிப்பறிந்து மாங்காய் பறித்து தந்ததிற்கு .
சரி என்னை ஆற்றங்கரை அழைத்து செல்கிறாயா?
வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது நான் சொல்ல
அவர்கள் கிடக்குறார்கள் அனாவசியமாக அவள் கூற
வா, சீக்கிரம் என்னை அழைத்து செல்.
குழந்தை என அடம்பிடித்தாள்.

மாலை வேளை
மஞ்சள் வெய்யில் அடிக்கும் நேரம்
பொன்னிற மேனியாளும், நானும்
ஆற்றங்கரையோரம் .
அவள் தாமரை பாதம் பட்டவுடன் ஆறு அது புனிதமானது.
அவள் முழங்கால் தெரிய தண்ணீரில் இறங்கியவுடன் நான்
திரும்பி நின்று கொண்டேன்.
அவள் சற்று
நேரத்தில் தன்னை முழுவதுமாக ஆற்றில் நினைத்துகொண்டாள்.
ஆனந்தமாக தண்ணீரில் விளையாடினாள்.
அவளை பார்பதா? அல்லது தவிர்பதா?
வெட்கம் உடலை பிடுங்கியது.
வா, நீயும் வா, என்று என்னையும் அழைத்தாள்.
ஒரு மனம் போ என்றது.
இன்னொரு மனம் வேண்டாம் என்றது.
கண்களை மூடி சிலையாக கரையிலேயே நின்றேன்.
நீ சரியான பயந்தாங்கொள்ளி
சொட்ட, சொட்ட பாவாடை சட்டை முழுவதும் ஈரத்துடன் கரையில் என் எதிரே அவள்.
இப்படியே எப்படி வீட்டுக்கு போகிறது
நான் அதற்கு என்ன செய்ய...
உன் கைலி கொஞ்சம் கொடு.
நல்ல வேளை நான் அன்று கால் சட்டை அனிந்திருத்தேன்.
ஒரு மரத்தின் மறைவில்
என் கைலியை தன் ஆடையாக
உடுத்தி அவள் ஆடைகளை உலர்தினாள்.
நானும் எப்படி,எப்படியோ அந்த காட்சியெல்லாம் காணாமல் அவள் பக்கம் திரும்பாமல் நின்றுயிருந்தேன்.
என்றாலும் அவள் துடுக்கான பேச்சும், போக்கும் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை.
நல்ல வேளை யாரும் இதையெல்லாம் பார்க்கவில்லை.
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.
நல்ல வேளையாக யாரும் ஏதும் எங்களை கேட்கவில்லை.
இரவு சாப்பிட்டு உறங்க சேன்றுவிட்டோம்.
விளக்குகள் அனைக்கப்பட்டு அவரவர் உறங்கி விட்டோம்.
ஏதோ ஒன்று என் தோல்களை தீண்டுவது தெரியவர
தூக்கிவாரி போட்டது.
அவள் என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பினாள்.
இருட்டிலும், முழு நிலவு வெளிச்சத்தில், அவள் தேவதை என காட்சியளித்தாள்.
அவசரமாக வீட்டின் மாடிக்கு அழைத்து சென்றாள்.
நாளைக்கு விடியலிலேயே நான் என் ஊருக்கு போய்விடுவேன். 
இதை சொல்லவே நான் உன்னை அழைத்தேன்.
நீ ரொம்ப நல்ல பையன்.
மீண்டும் நற்சான்றிதழ்
கொடுத்தாள்.
ஏன்? என்றேன்.
அவள் கண்களால் என்னையே பார்த்தாள்.
கலகலவென சிரித்தாள்.
உனக்கு புரியவில்லை.
புரியவில்லை என்றேன்.
நீ ரொம்ப நல்லவன் என்றாள்.
தேன் தடவிய மாங்காய் என்று சொன்னாயே
நீ கவிதை எழுதுவியா?
எங்கே, இப்போதே என்னை பற்றி ஒரு கவிதை சொல்லேன்.
திடீரென்று கேட்டால் எப்படி.

"ஒட்டு மொத்த அழகையும் உனக்கே அற்பனித்த அந்த பிரம்மனுக்கு நன்றி.
தேவதை கூட்டத்து தலைவியே!
இந்த தரணியில் நீயே அழகி!
நீ மட்டும் தான் அழகி!
உன் பார்வை
பார்வை அல்ல
அது இதயத்தை தைத்த அம்பு !
உன் இடை
இடை அல்ல
அது கோடை கால காணல் நீர்.
போதும், போதும்.
என் வாயை பொத்தி
சற்றும் எதிர் பாராமல்
ஆர கட்டி தழுவினாள்.
என் கரங்கள் செய்வது அறியாது தவித்தது.
நான் சொன்னேன் இல்ல, நீ ரொம்ப நல்ல பையன் "
செல்லமாக என் கண்ணத்தை தட்டிவிட்டு மான் என துள்ளி குதித்து
ஓடி சென்று விட்டாள்.
நான் என்னை ஆசுவாச படுத்தி கொள்ள வெகு நேரம் ஆனது.
அடுத்த நாள் அவள் இல்லை.
மாமரத்தின் அருகே சென்றேன்
ஆற்றங்கரையோரம் சென்றேன்.
மின்னலன வந்து ஓரிரு நாட்களில் என் மனதில் காதல் தீபம் ஏற்றிவிட்டு சென்றுவிட்டாள்.
இனி அவளை எப்போது பார்ப்பேன்.
என்ன காரணம் சொல்லி அவள் ஊருக்கு செல்வேன்.
உறக்கம் வரவில்லை
மொட்டை மாடிக்கு சென்று தனிமையாக
அவளை நினைத்து ஏங்கினேன்.
சில சமயம் குலுங்கி, குலுங்கி அழுதேன்.
மீண்டும் அவளை எப்போது பார்ப்பேன்.
ஆண்டவனே, அவளை மறக்க முடியவில்லை.

- பாலு.

எழுதியவர் : பாலு (8-Aug-20, 11:17 pm)
சேர்த்தது : balu
பார்வை : 209

மேலே