புதுக்கவிதைகள்

பாமரரும் ரசித்து படித்து அனுபவிக்கும்
பாடல் வரிகள் புதுக்கவிதை வரிகள்
இடத்தில் இலக்கணம் இல்லையென்பதால்
பாடல் வரிகள் என்றேன் அடிகள் எனாது
ஓடும் நதியில் ஓடம் ஓட்டும் படகோட்டி
பாடும் பாட்டிலும் பண் உண்டு அர்த்தமுள்ள
வார்த்தைகளும் உண்டு எதுகையும் மோனையும்
தானே வந்து அமைவதும் உண்டு ஆனால் பாடும்
அவன் படித்தவன் அல்லன் பாமரன்
இயற்கையின் அரவணைப்பில் வாழும் அவனை
இயற்கை அன்னையே பாடவைக்கிறாள் பண் தந்து
பாடல் வரிகளும் தந்து- பள்ளுப் பாட்டாய்
வயலில் நாத்து நடும் பெண்மணிகள்
சோர்ந்திடாது வேலை செய்ய பண் இசைத்து
பாடுகின்றார் ஆடுகின்றார் ;;;; இவர்கள்
முறையாய் இசையேதும் கற்கவில்லை
எழுதவும் படிக்கவும் கூட தெரியாதவர்
இவர்கள் பள்ளு பாட்டிற்கு தனி நயமுண்டு
இத்தனை ஏன் இவர்கள் இசைக்க கேட்டு
பட்ட மரம் கூட தவிர்க்கும் என்பர்

இலக்கணத்திற்கு கட்டுப்பாடா இக்கவிதைகள்
மரபு கவிதைகள் அல்லதான் ஆனால்
மக்கள் விரும்பி கேட்கும் என்றும்
புது கவிதைகள் ......

மரபு கவிதைகள் இலக்கிய ரத்தினங்கள்
மரபு சாரா புது கவிதைகள் தீட்டா வைரக்கற்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Aug-20, 4:59 pm)
பார்வை : 160

மேலே