அந்த காட்டின் நீர் வீழ்ச்சி

அந்த காட்டின் நீர் வீழ்ச்சி

மலை முகட்டில் நின்றிருக்க
எங்கோ தலை தெறிக்க
பறந்து செல்லும் மேகங்கள்
கீழே தள்ளி விடும்
வேகத்தில் காற்று
எதிர் முகம் தெரியா
பனி மூட்டம்
சல சலவென
நீர் வீழ்ச்சியின் சத்தம்
காதுக்குள் கேட்க
மலை உச்சியின்
கீழிறங்கும்
ஒற்றை அடி பாதை
இருபுறமும் ஒட்டி உரசி
புதர் காடுகள்
பனி மூட்டத்தை
கண்களால் விலக்கி
ஒற்றை அடி பாதையில்
நடக்க நடக்க
பாதையோ அடர் காட்டுக்குள்
கொண்டு செல்கிறது

அதன் ஆழ்ந்த அமைதி
உள்ளுக்குள் ஊடுருவிய
பயம்
சலசலவென நீர் வீழ்ச்சியை
கண்டவுடன் எல்லாம்
மறந்து நீருக்குள்
துள்ளி குதித்து
விளையாட தூண்டிய
மனம்.

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (10-Aug-20, 6:51 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 96

மேலே