மனைவிக்காக

என் மனைவி பிறந்தவீட்டில் மகள்.
புகுந்தவீட்டில் மருமகள். என் இதயவீட்டில் மகாராணி. பின் தூங்கி முன் எழுந்து என் தூக்கம் ரசித்த அவளை, நான் அவள் துயிலழகில், துயிலெழுப்பாமல் திரும்புகிறேன் அவளின் எட்டு மணி அதிகாலையிலும்… வரையப்படாத ஓவியத்தின் வண்ணங்களாய் சிதறிக் கிடந்தேன் நான். என் அன்பு மனைவியின் வருகைக்கு பின்பு அழகிய ஓவியமானேன் இன்று. தன் சொந்தங்களைவிட்டு என் சொந்தமெனவந்தவள். என்னில் அடைக்கலமாகி என்னை அடக்கியாள்பவள். என் வாழ்க்கை சக்கரத்தில் அச்சாணியாய் இருப்பவள். நான் சொல்வதையெல்லாம்
அமைதியாய் கேட்டுவிட்டு
சொல்லி முடித்தவுடன் நான் தான் உங்க கூட சண்டையே என்கிட்ட ஏன் சொல்றீங்க? எனக் கூறும் கோபக்காரி. உரிமையை தந்துவிட்டு அன்பை வெளிப்படுத்த மாட்டான் கணவன் ஆனால் சின்ன சின்ன விஷயங்களிலும் அன்பை எதிர்பார்ப்பவள் மனைவி..! என்று நான் புரிந்துக்கொண்டேன் அவளிடம். அர்த்தமில்லா என் வாழ்வில் அர்த்தமாக வந்தவள்! வாழ்க்கையின் உயரங்களை அவளை சுமந்துகிட்டே தொடப்போகிறேன். தனிமரமென்னை தோப்பாக்க கடவுள் எனக்கு தந்த வரம் அவள். எண்ணற்ற நன்றிகள் சொல்கிறேன்.. இறைவா அவளை என்னவளாக்கியதற்க்கு!
'' என்னி(எனக்குள்)லடங்கா என்னவளையெண்ணி எண்ணி(எண்ணிக்கை)லடங்கா வீண்மின்களும் சற்று வியக்கத்தான் செய்யும். '' என்று என் கணவனி்ன் மனம் என்னைப்பற்றி எண்ணியதாக என் மனம் எண்ணியது.
✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (10-Aug-20, 11:32 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : manaivikaaka
பார்வை : 144

புதிய படைப்புகள்

மேலே