காதலின் பார்வை

மறைந்திருந்து பார்க்கும்
மவுனம் நச்சென்று,
ஓரக்கண்மட்டும் ஒயிலாக
பார்த்ததில் பரவசமானாள்,
அந்த
ஒருவனின் பார்வையில்
வேகம் பளிச்சென்றது ,
சட்டென்று தன்னை
மறைத்தாள்
நாணம் எனும் மின்னலாய் ,
தேடினான் அவன் எங்கே /அவள்
தெரியாதோ /
நோக்கியபோது நிலைத்து
விட்டாளே நங்கையவள்,
அங்கேயே தேடு அதுவே
அவன் இதயம்
அதுதான் நச்சென்று
பதிந்து விட்ட கல்வெட்டு

எழுதியவர் : பாத்திமாமலர் (11-Aug-20, 11:13 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kathalin parvai
பார்வை : 169

புதிய படைப்புகள்

மேலே