கடல் அலையின் ஊடல்

கடலுடன்
ஊடல் கொண்டு
பிரிந்து வந்த
கடல் அலைகள்...! !

கடலை விட்டு
பிரிய மனமில்லாமல்
மீண்டும்...
கடலோடு சங்கமம்..! !

ஊடலில் தோற்றவர்
வென்றார் என்ற
வள்ளுவனின் வாக்கு
பொய்யாகுமோ..! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Aug-20, 12:12 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kadal alayin oodal
பார்வை : 63

மேலே