கண்ணன் என் கணவன்

கண்ணன் என் கணவன்
**************************

அன்பானவன் அழகானவன்
அறிவானவன் அவன்தானடி

உயிரானவன் உறவானவன்
உணர்வானவன் உறைந்தானடி

ஆர்ப்பரிக்கும் அலையானவன்
ஆழிதனில் முத்தானவன்

இன்மொழியின் இயல்பானவன் இன்தமிழின் இசையானவன்

அவன் கண்களில் உள்ளது காந்தமடி
அதில் நெஞ்சம் கொள்ளைப் போகுதடி

கொடுப்பதில் அவனோ கர்ணனடி
மனதைப் பறிப்பதிலே கள்வனடி

தீராத விளையாட்டு பிள்ளையிவன்
கோபியர் கொஞ்சும் முகந்தனிவன்

பால்மனம் மாறா குமரனிவன்
நானிலம் போற்றும் நாயகனிவன்

புன்னகை சிந்தும் முல்லையடி
புத்தொளி தரும் புத்தனடி

மாளிகையில் தூங்கும் மன்னனடி
மனதினில் வசிக்கும் மாயனடி

அதர்மத்தை அழிக்கும் பரந்தாமனிவன்
அகிலம் காக்கும் அரங்கனிவன்

துன்பத்தில் துணைவரும் தோழனிவன்
துதித்திடும் நாவிற்கு அன்னையிவன்

அவன் திருமுகம் பார்த்தால் போதுமடி
அதில் தெய்வங்கள்
குடிக்கொள்ளும் கோவிலடி

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (11-Aug-20, 2:12 pm)
பார்வை : 105

மேலே