புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது இந்த பழமொழியின் உண்மையான பொருள் தெரியுமா

நம் தமிழ் மொழியில் எத்தனையோ அருமையான பழமொழிகள் வழக்கில் உள்ளன . மிகப் பழமையானது என்பதால் பலர் அதன் உண்மையான பொருள் தெரியாமல் அல்லது உண்மையான பழமொழியை அறியாமல் அன்றாட வாழ்க்கையில் சொல்வழக்கில் பயன்படுத்துகின்றனர் . ஒவ்வொரு பழமொழியின் உண்மையான சொலவடை மற்றும் பொருள் புரிந்து பயன்படுத்துவது மற்றும் இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்வது இன்றியமையாதது . அந்த வகையில் கீழே உள்ள பழமொழியை கவனமாக படித்து உண்மையான பொருளை புரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள் .

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்ற பழமொழியைப் பார்ப்போம் .

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது --- இது தவறான சொலவடை

சரியான சொலவடை இதோ

புலி பசித்தாலும் பிள்ளையைத் தின்னாது என்பது .

இதுவே காலப்போக்கில் புலிப்பாசித்தாலும் புள்ளையைத் தின்னாது என்று மாறி பின்னர் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று மருவி வழங்குகிறது .

புலி பசித்தாலும் பிள்ளையைத் தின்னாது என்பதன் உண்மையான பொருள் என்ன ?

பொதுவாக விலங்குகள் குறிப்பாக ஊண் உண்ணும் விலங்குகள் குட்டியை ஈனும் போது கடும் பசியில் இருக்கும் . பசி தாங்கமுடியாமல் தான் என்ற முதல் குட்டியை தின்றுவிடும் . இது எல்லோரும் அறிந்ததே . இன்றும் நாம் இந்த பழக்கத்தை நாம் வளர்க்கும் நாய் , பூனை இடம் காணலாம் . காட்டு விலங்குகளும் ( சிங்கம் ,ஓநாய் நரி போன்றவை ) இதையே தான் செய்கின்றன . இதுவே மருந்து என்றும் சில பெரியவர்கள் கூற நாம் கேற்றிருக்க வாய்ப்புண்டு . ஆனால் புலி சற்று மாறுபட்ட விலங்கு .

எவ்வளவு கடும்பசி இருந்தாலும் புலி தான் ஈன்ற குட்டியை தின்பதில்லை . இந்த பழக்கத்தை சிறப்பித்து கூறும்பொருட்டே "புலி பசித்தாலும் பிள்ளையைத் தின்னாது என்ற பழமொழி வழக்குக்கு வந்தது . பின்னர் அதுவே வழக்கொழிந்து உருமாறி புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று தவறான பொருளில் வழங்கப்பட தொடங்கிவிட்டது .

தாவரங்களை உண்ணும் யானை , மான், முயல் பசு போன்ற விலங்குகளில் தான் ஈன்ற குட்டியைத் தின்னும் பழக்கமில்லை . அதே போலவே முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் பறவைகள், பாம்பு போன்றவையும் இப்படி செய்வதில்லை . ஒரு வகை கட்டுவிரியன் பாம்பு குட்டிப் போடும் தன்மை கொண்டது , அதுகூட தன் குட்டியை உண்பதில்லை .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (11-Aug-20, 4:56 pm)
பார்வை : 1529

சிறந்த கட்டுரைகள்

மேலே