உண்மை பக்தி
பசித்தக் குழந்தைக்கு பால் கொடு
பரமனுக்கு நீ செய்யும் பாலாபிஷேகம்
வறியவர்களுக்கு ஆடை கொடு
ஆண்டவனுக்கு நீ சாத்திடும் வஸ்த்திரம்
இல்லாதார் வாழ்வில் ஒரு அகல் ஏற்று
ஆண்டவனுக்கு நீ செய்யும் தீபாராதனை
எளியவர்களுக்கு நீ காட்டும் இரக்கம் தான்
இறைவனிடம் நீ காட்டும் பக்தி
இருக்கும் வரை நீ காட்டும் அன்பு தான்
இறுதியில் நீ அடையும் முக்தி!