முகநூல் பதிவு 71

சாதி, மதம்
மொழி, இனம்
தேசம் அனைத்தும் துறந்து மனிதனாய்
மனிதனுக்கு மட்டுமல்லாமல்
உலக அனைத்துயிர்களின் நலனுக்கான வழிமுறைகளை சிந்திக்க வேண்டும்...

ஏனென்றால் இறைவன் சிந்திக்கும் திறனை மனிதனுக்கு மட்டுமே கொடுத்துள்ளான்....
இந்த மாபெரும் பிரபஞ்சத்தை காக்கும் வல்லமையையும் மனிதனுக்கு மட்டுமே அருளியுள்ளான்.... ஆனால் மனிதனோ
விஞ்ஞான முன்னேற்றம் என்ற பெயரில் , சிந்தனையை முழுதும் தன் வசதிகளை பெருக்கிக் கொள்ளவே சுயநலமாக சிந்திக்கின்றான்....

படைப்பதும் காப்பதும் அழிப்பதும் அவன் செயலாக இருந்தாலும்....
உலகை காக்கும் தன் பிரதிநிதியாக மனிதனை நம்பி ஒப்படைத்துள்ளான்....
படைத்தவன் நம்பிக்கையை நிலைநாட்ட அனைத்துயிரையும் காத்து , இந்த பிரபஞ்சத்தில் பசுமை மிளிர்ந்திட செய்யப் போகிறோமா...?
அல்லது
ஒருவருக்கொருவர் நமக்குள்ளே
சாதி மதம் இனம் மொழி பெயரால் சண்டையிட்டு மாளப் போகிறோமா...?

விரைவாய் சிந்தியுங்கள்!
வீறு கொண்டு செயல்படுங்கள் !

எழுதியவர் : வை.அமுதா (13-Aug-20, 11:49 am)
பார்வை : 33

மேலே