முயற்சி

சாதிக்கப்பிறந்ததவள் என்ற ஆணவம் கொண்டு தோழியே எழுந்திரு!! நீ வென்றிட மறந்தாலும் முயற்சிக்க மறக்காதே.... முயன்றால் இமயமும் இரண்டடிதான் முயற்சியில் சோர்ந்தால் இரண்டடியும் இமயம் தான்..... முயன்றுபார்! விழுந்தவுடன் எழுந்திடு வீழ்ந்துவிடாதே...... வீரத்துடன் விவேகத்தையும் வளர்த்துக் கொள். பகைவரை வென்றிடு பயந்துவிடாதே.. பலமுறை அறுந்தப் பின்னும் வலைபின்னும் முயற்சியை கைவிடவில்லை சிலந்தி!! மனிதா உன் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் போது நீ மட்டும் ஏன் சஞ்சலம் கொள்கிறாய். உணரவேண்டிய உண்மைகளில் ஊமையாகி போனவை இவை உணர்ந்துக்கொள். வாழ்க்கை என்பது பரமபதம் போல்... ஏணி உன்னை ஏற்றிக் கொண்டு உச்சிக்கு செல்லும்... பாம்பு உன்னை கொத்தி பாதாளத்தில் இறக்கிவிடும்... பாம்புக்கு பயந்து நீ படுத்துவிட்டால்... உன் வாழ்க்கை ஏணியில் எப்படி ஏறபோகிறாய் நீ... தடைகளை கடந்து நீ நிமிர்ந்து நில்.... சாதனைகள் படைத்துவிட்டு சாவதென்று தீர்மானித்துக் கொள்... நாளை சவபெட்டிக் கூட உன்னை சுமப்பதால் சந்தோசப்படும். உனக்கு நீயே தைரியப்படுத்திக் கொள்! என்னால் முடியும் என்று அல்ல.... என்னால் மட்டுமே முடியும் என்று.
✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (13-Aug-20, 11:00 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : muyarchi
பார்வை : 978

மேலே