தர வேண்டும்

நகைச் சுவை என்பது
நம்மை நலமோடு வைத்திருக்க
மாந்தருக்குக் கிடைத்த
மகத்தான சொத்து—மானுட
வாழ்வுக்கு இயற்கை தந்த
வரப் பிரசாதம்
சோர்விலும் சுகம் தரும்

நகைச் சுவை உணர்வு
நமக்கு இல்லாதிருந்தால்
துன்பத்தையும், சோகத்தையும்
தாங்க முடியாம
தூக்கில் தொங்கி—உயிரை
தொலைத்து விடுவார்கள்
வாழ்வு பறிபோகும்

பரிசு பெறும் புலவரிடம்
பார்போற்றும் வேந்தன் கேட்டான்
“ புலவரே சன்மானத்தை ஏன்
சில்லரையாகக் கேட்கிறீர் “
அரண்மனையில் இருக்கும்
அதிகம் பேருக்கு கையூட்டு
தர வேண்டும் மன்னா !

எழுதியவர் : கோ. கணபதி. (14-Aug-20, 7:30 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : dhara vENtum
பார்வை : 30

மேலே