பூ அவள் வண்டு நான்

மல்லிகைப்பூ தாங்கிய கார்க் குழலாள்
மல்லிகை வாசம் என்னை அருகில்
அழைக்க அருகில் சென்றேன் நான்
அவள் தேன் சிந்தும் அதரம்
என்னை விருந்துக்கு அழைக்க கருவண்டு
ஆனேனே நான் பூவின் வாசம்
சுவைத் தேடி ஆனால் பூவிலேயே தங்கிவிடும்
வண்டு நான் காதல் வண்டு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Aug-20, 9:35 pm)
Tanglish : poo aval vandu naan
பார்வை : 77

மேலே