இறந்தவர் எப்படி மன்னிப்பார்

தலையில ஒரு முண்டாசு
இடுப்புல ஒரு காடா வேட்டி
கையில ஒரு நாலடி நீள கோல்
வாட்ட சாட்டமான ஆறடி உயரமான
வயசு அம்பதாகவே நிலச்சு போன
இறுகிய மொகத்தோட எப்பவும் இருந்த
ஊராகாலி மாட்டுக்கார கிழவர
ஊரார் 'நன்னி' என்றே அழைத்தனர்.
தம் மக்கள் ஐவரையும்
தாய் தகப்பனற்ற
தம்பி மக்கள் மூவரையும்
மாடு மேய்த்தே கரை சேர்த்தவர்
மாண்டு போனார்
எண்பது வயதில்.
கருமாதிப் பத்திரிக்கை
படிக்கையிலதான் தெரியுது
கிழவர் பேரு 'ஆதிமூலம்'.
இட்ட பேரத் தொலைச்சு
பட்ட பேரிலேயே
வாழ்ந்து மடிஞ்சு போன
ஒரு மனுசனிடம்
எப்படிக் கேட்பது மன்னிப்பு?
-தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (18-Aug-20, 10:08 pm)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
பார்வை : 75

மேலே