நகைச்சுவை- ஜாதி

கட்சி தலைவர் வீட்டில் : 'ஜாதி இரண்டொழிய வேறில்லை"
என்ற வாக்கியம் எழுதப்பட்ட
பலகை தூங்கப் பட்டிருக்க ...

தலைவர் வேலைக்கார பையனிடம் பேசுகிறார் ::
ஏண்டா முனியா, இதோ பாரு முனியா என் பையன்
ரொம்ப ஆசையா வாங்கிவந்த ஜாதி நாய்க்குட்டி ..
அது எங்கடா விளையாடிக்கிட்டிருக்கு கொஞ்சம் பார்த்து சொல்லு

வேலைக்காரன் முனியன்: ஐயா , அது என் ரூம்ல பாயில
தூங்கிக்கிட்டிருக்கு ஐயா ..... எழுந்தவுடன் கொஞ்சம்
சோறு போட்டுடுவேன் ..

தலைவர் : டேய்.... தண்டசோறு..... அது உயர் ஜாதி நாய்க்குட்டி டா
அதா தம்பி எ.சி ரூம்ல ஒரு மெத்தை போட்டு முதல விடு
நீ தூங்கும் பாய் உனக்கு உயர் ஜாதி நாய்க்கு இல்லை..

அது சரி இன்னிக்கு வெள்ளிக்கிழம், அம்மாக்கு
ஜாதி மல்லி வாங்கிட்டு வந்தையா....

முனியன் : ஐயா, வீட்டுல நிறைய கனகாம்பரம் பூத்திருக்க
...........(தலை சொரிந்தான்)

தலைவர் : டேய் மடமண்டை, அம்மா விரும்புவது எல்லாமே
உயர் ஜாதியே.... ஜாதிப்பூ, ஜாதி நாய் , உயர் ஜாதி
மருமகப்பொண்ணு.....

முனியன் ::::: : சரிங்க அப்படியே.... ( மனசுக்குள்ளே ...அப்போ ' ஜாதி
இரண்டொழிய வேறில்லை' ..... போர்டு அது என்ன..!!!!!!)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Aug-20, 1:32 pm)
பார்வை : 192

சிறந்த நகைச்சுவைகள்

மேலே