மன்னிப்பு

பிறர் செய்தத் தவறுக்கு நான் பெற்றத் தண்டனை அவர்களுக்கு நான் கொடுக்கப்போகும் மன்னிப்பு. எதிரியையும் மன்னிக்கப் பழகிகொண்டவள் நான் ஆனால் பிழையாகக் கூட மன்னிக்க மறுத்து விடுவேன் துரோகியை. உங்கள் தவறுகளை மன்னிக்கவோ, மறக்கவோ முடியாதவள் அல்ல நான். உங்கள் தவறுகள் என்னைப் போன்று மற்றவர்களையும் காயப்படுத்திவிடும் என்ற அச்சமே என்னுள் அதிகம். மன்னிப்பு அடுத்தத் தவறின் ஆரம்பமாக இருக்கக் கூடாது. உங்களுடைய செயல் தவறு என்று பிறர் சுட்டிக்காட்டும் முன் உங்கள் மனம் உறுத்தல் கொள்ளுமாயின் மன்னிப்புக் கேட்கத் தாமதம் கூடச் செய்யாதிர்கள்.... நீங்கள் செய்தத் தவறுகளை மன்னிக்க முயற்சிக்கிறேன். ஆனால் மறந்து விட மாட்டேன்... மன்னிப்பதற்கு நான் கடவுளும் அல்ல! மறப்பதற்கு நான் சவமும் அல்ல... நானும் மனிதன் தானே!!!
"கோபம் என்பது என் பிறவி குணம் அல்ல.. பிறரால் என்னுள் பிறந்தக் குணம்".
✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (27-Aug-20, 11:01 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : mannippu
பார்வை : 5297

மேலே