அவனுக்கொரு கவி
கண்களால் காதலைச் சொன்னதும் அவன்தான்.
இல்லையென வார்த்தைகளால் இதயத்தை கிழித்ததும் அவன்தான்.
எதை நான் ஏற்பது?
அவன் இதழ்கள் சொல்லிச் சென்ற பொய்யையா?
அவன் விழிகள் உணர்த்திச் சென்ற உண்மையையா?
புரிந்துக் கொள்ளமுடியாமல் அவனும்
ஏற்றுக் கொள்ளமுடியாமல் நானும்
பயணிக்கிறோம்
நட்பு எனும் பெயரில்.